மத்திய கைலாஷ் அடையாறு பாலத்தில் பயமின்றி செல்லலாம்.. தமிழக அரசு விளக்கம்
சென்னை: அடையாறு பகுதியிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கிண்டி பகுதியில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்களும் மற்றும் ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து கிண்டிக்கு செல்லும் வாகனங்களும் தங்குதடையின்றிச் செல்வதற்கு ஏதுவாக சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.61 கோடியில் 'எல்' வடிவ மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 16-ந்தேதி திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
சென்னையில் ஐடி நிறுவனங்கள் அதிகம் அமைந்துள்ள பகுதி என்றால் அது ஓஎம்ஆர் சாலை தான். மத்திய கைலாஷ் சந்திப்பில் தொடங்கி நாவலூர் வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைந்துள்ளன, மிகப்பெரிய வணிக நிறுவனங்களின் அலுவலங்களும் அமைந்துள்ளன. இதனால் எப்போதுமே நெரிசல் அதிகமாக இருக்கும். இந்த மத்திய கைலாஷ் சந்திப்பில் ஏற்படும் நெரிசலை கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. அதேநேரம் மெட்ரோ பணிகள் நடக்கும் காரணத்தால் பெரிய அளவில் நிலத்தை கட்டுப்பாட்டில் எடுக்க அரசால் முடியவில்லை.

இந்த சூழலில் மத்திய கைலாஷ் சந்திப்பில் ரூ.61 கோடியில் கட்டப்பட்டுள்ள 'எல்' வடிவ மேம்பால பணிகள் நிறைவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி உள்ளது. இந்த மேம்பாலத்தை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய கைலாஷ் சாலை சந்திப்பில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அடையாறு பகுதியிலிருந்து கிண்டி நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், கிண்டி பகுதியில் இருந்து அடையாறு செல்லும் வாகனங்களும் மற்றும் ஓ.எம்.ஆர். சாலையிலிருந்து கிண்டிக்கு செல்லும் வாகனங்களும் தங்குதடையின்றிச் செல்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் இருவழித்தடம் அகலம் கொண்டதாகவும், ஒருவழி வாகனப் போக்குவரத்து கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 652 மீட்டர் ஆகும் (அணுகு சாலை உட்பட).
சர்தார் பட்டேல் சாலையிலிருந்து ராஜீவ்காந்தி சாலைக்குப் பிரிந்து செல்லும் இடத்தில் பாலம் வளைவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவானது 30 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வளைவுப் பகுதியில் பாலத்தின் அகலம் கூடுதல் ஆக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்புக்காக பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரின் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வளைவுப் பகுதியில் எவ்வித பயமுமின்றி பயணிக்கலாம். இருப்பினும், பாலத்தின் மீதான பயணத்திற்கு வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வேக கட்டுப்பாட்டிற்கான எச்சரிக்கை பலகைகள் பாலத்தின் தடுப்புச்சுவரில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 'எல்' வடிவ இருவழிச்சாலை மேம்பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) திறந்து வைக்க உள்ளார்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications