டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது புடவைக்கு கெட்அவுட்டா.. ட்விட்டரில் முறையிட்ட பெண்.. மன்னிப்பு கேட்ட டெல்லி ஓட்டல் நிர்வாகம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் உள்ள ஹோட்டலில் இந்திய உடை அணிந்து வந்த பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு எழுந்தது. இதையடுத்து அந்த பெண்ணை ஹோட்டல் நிர்வாகம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தது.

Recommended Video

    என்னாது புடவைக்கு கெட்அவுட்டா.. ட்விட்டரில் முறையிட்ட பெண்.. பணிந்தது டெல்லி ஹோட்டல் நிர்வாகம் - வீடியோ

    டெல்லியில் குருகிராமைச் சேர்ந்த ஒரு பள்ளியின் முதல்வர் சங்கீதா கே நாயக். இவர் வசந்த் கஞ்சில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கிளின் மற்றும் லிவி ஹோட்டலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்றிருந்தார்.

    A restaurant in Delhi denied entry to a woman who wears Ethnic wear

    அப்போது அவர் இந்திய பாரம்பரிய உடையான புடவை அணிந்து சென்றதால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது போன்ற உடையை அணிந்து வருபவர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை என கூறியதாகவும் தெரிகிறது.

    இதுகுறித்து வீடியோவுடன் சங்கீதா தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் வசந்த் கஞ்சில் உள்ள கிளின்- லிவி ஹோட்டலில் ஒரு பாகுபாட்டை நான் சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரம்பரிய உடை அணிந்தவர்கள் அனுமதிக்கப்படாததால் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்தியாவில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் அனைத்து விதமான கேஸுவல் உடைகளும் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் பாரம்பரிய உடைக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நாம் இந்தியர் என கூறிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.

    இந்த வீடியோ 10-ஆம் தேதி வைரலானதுவுடன் அதை ஆயிரக்கணக்கானோர் பார்த்தனர். அவர்கள் சங்கீதாவுக்கு ஆதரவாக பதிலளித்தனர். இதையடுத்து கிளின் மற்றும் லிவி ஹோட்டலின் இயக்குநர் சவுரவ் கனிஜோ மன்னிப்பு கேட்டுள்ளார். தனது ஹோட்டல் ஊழியரின் செயலுக்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து மன்னிப்பு கேட்டதற்கு சவுரவுக்கு சங்கீதா நன்றி தெரிவித்துள்ளார்.

    English summary
    A restaurant in Delhi denied entry to a woman who wears Ethnic wear and the restaurant director apologised personally to that woman.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X