டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹாட்டான பொண்ணா இருந்தா.. எனது வாரிசாக வரலாம்.. தலாய்லாமா சர்ச்சை பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    Dalai Lama : அடுத்த தலைவர் குறித்து தலாய்லாமா சர்ச்சை பேச்சு- வீடியோ

    டெல்லி: புதிய தலாய்லாமாவாக ஒரு பெண்ணை தேர்வு செய்யலாம். ஆனால் அவர் அழகான பெண்ணாக இருக்கவேண்டியது அவசியம் என்று தற்போதைய தலாய்லாமா கூறியுள்ளார்.

    திபெத்தில் புத்த மத தலைவராக இருப்பவர் தலாய்லாமா என்று அழைக்கப்படுகிறார். தற்போது தலாய்லாமாவாக இருப்பவர் 14 ஆவது புத்த மத தலைவராவார்.

    a woman can become his heir if she is hot, dalai lama

    இவருக்கு உடல் நலக்குறைவு காரணமாகவும் வயது முதிர்வு காரணமாகவும் புத்த மதத்தினர் அடுத்த தலாய்லாமாவை தேர்வு செய்யும் முடிவில் உள்ளனர். அடுத்ததாக தேர்வு செய்யப்படும் தலாய்லாமா ஒரு பெண்ணாக இருக்கவேண்டும் என புத்த மதத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிபிசி ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தலாய்லாமாவிடம் அடுத்த தலைவர் குறித்த கேள்வி எழுப்பப் பட்டது, குறிப்பாக அடுத்த தலைவர் ஒரு பெண் தலாய்லாமாவாக இருப்பாரா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தலாய்லாமா ஒரு பெண்ணை தலாய்லாமாவாக தேர்வு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. ஒரு பெண்ணை தலைவராக தேர்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன என்று கூறியுள்ளார்.

    இப்படி கூறியவர் இதற்கு அடுத்த படியாக கூறியதுதான் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அடுத்ததாக ஒரு பெண் தலாய்லாமாவாக தேர்வு செய்யப்படுவதாக இருந்தால் அவர் அழகானவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஒரு தலாய்லாமா பெண் அழகனாவராக இருந்தால் மட்டுமே அவரை பெரும்பாலானோர் பார்ப்பதற்கு விரும்புவார்கள். அழகில்லாத பெண்ணை பார்ப்பதற்கு பெரும்பாலானோர் விரும்புவதில்லை என்று கூறியுள்ளார்.

    இதற்கு அவரிடம் தலாய்லாமாவாக தேர்வு செய்யப்படும் பெண்ணுக்கு அழகு மட்டுமே போதுமானாதா அவரது சிந்தனை, அறிவாற்றல் குறித்தவை அவசியமில்லையா என்று கேட்டபோது அதுவும் அவசியமானதே என்று கூறியுள்ளார். தலாய்லாமாவாக வரும் பெண் அழகாக இருக்கவேண்டும் என்று தற்போதைய தலாய்லாமா கூறியது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Dalai Lama has said that a woman can be his heir, if she is really hot.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X