டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா 3வது அலையில் இந்தியாவில் உயிரிழப்புகள் குறைவு.. காரணம் என்ன தெரியுமா? வி.கே.பால் விளக்கம்

By
Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா மூன்றாவது அலையில் உயிரிழப்புகள் குறைந்துவருவதற்கு தடுப்பூசி தான் காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகமெங்கும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. புத்தாண்டுக்கு முன் கொரோனாவின் எண்ணிக்கை 5%க்கும் கீழ் இருந்தது. இந்நிலையில் புத்தாண்டுக்குப் பின் கொரோனாவின் தினசரி பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள உலகமெங்கும் தடுப்பூசி பயன்பாடு அதிகரித்தது. இதனால் இந்த மூன்றாவது அலையில் பாதிப்புகள் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

ஹலோ.. யாரை தலித்துன்னு சொல்றீங்க.. அன்றே கதறவிட்ட மாயாவதி.. இன்று ஒதுங்குவது ஏனோ? ஏங்கும் தொண்டர்கள்ஹலோ.. யாரை தலித்துன்னு சொல்றீங்க.. அன்றே கதறவிட்ட மாயாவதி.. இன்று ஒதுங்குவது ஏனோ? ஏங்கும் தொண்டர்கள்

உயிரிழப்பு

உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையில், உயிரிழப்புகளைத் தடுத்து பாதிப்புகளைக் குறைத்திருக்கிறது தடுப்பூசி. இந்தியா முழுதும் தடுப்பூசி செலுத்துக்கொண்ட காரணத்தால் உயிரிழப்புகள் பெருவாரியாக குறைந்துள்ளதாக நிதி ஆயோக்கின் சுகாதாரக் குழு உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று வரை 3.17 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் 28,000-த்தை கடந்து அதிகரித்துள்ளது. இந்தியாவில் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் அதிகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக‌ மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 தடுப்பூசி

தடுப்பூசி

நிதிஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் கூறுகையில், '' இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருகிறது. மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டதால், கொரோனாவில் பாதிக்கப்பட்டாலும் உயிரிழப்பு பெருமளவு குறைந்துவிட்டது. இந்தியா முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நூறு கோடி தடுப்பூசி என்ற சாதனையை செய்துள்ளோம்.

 அலட்சியம் கூடாது

அலட்சியம் கூடாது

இன்னும் 6.50 கோடி மக்கள் 2-வது டோஸ்தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். கொரோனாவால் உயிரிழப்பு குறைந்துவிட்டது என அலட்சியமாக இருக்கக்கூடாது. கொரோனாவுக்கு எதிரான போரை விட்டுவிடக்கூடாது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு'' என்று தெரிவித்தார்.

Recommended Video

    Vaccine மூலம் கிடைக்கும் பலன்.. அதிகாரிகள் சொன்ன தகவல் | Oneindia Tamil
     குழந்தைகள்

    குழந்தைகள்

    கடந்த 2020ம் ஆண்டு கொரோனாவில் உயிரிழந்த 10 சதவீதம் பேரில், 0.96 சதவீதம் மட்டுமே 0 முதல் 19வயதுள்ளவர்கள். 2021ல் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 11 சதவீதம் பேரில் 0.70 சதவீதம் பேர் மட்டுமே 19 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் உயிரிழந்தனர். இதனால் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தெரிவித்தனர்.

    English summary
    The Central government says the vaccine is the reason for the declining death rate from the third wave of corona virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X