பிரியங்கா காந்தி மகனுக்கு நிச்சயதார்த்தம்.. இஸ்லாமிய பெண்ணை கரம்பிடிக்கிறார்! மணப்பெண்ணின் பின்னணி
டெல்லி: சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தியின் மகன் ரெய்ஹன் வதேராவுக்கும் , அவரது 7 ஆண்டு காதலியான அவிவா பெய்க்கிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தான் பிரியங்கா காந்தியின் மருமகளான அவிவா பெய்க் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பது உள்பட பிற பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இவரது மகனும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதேவேளையில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்திக்கும், தொழிலதிபர் ராபர்டர் வதேராவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரியங்கா காந்தி - ராபர்ட் வதேரா தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகள் பெயர் மிரயா வதேரா. இவருக்கு 23 வயது ஆகிறது. இவர் சமீபத்தில் கல்லூரி படிப்பை முடித்தார்.
மகன் பெயர் ரெய்ஹான் வதேரா. இவருக்கு 25 வயது ஆகிறது. இவர் விசுவல் ஆர்ட்டிஸ் மற்றும் போட்டோகிராபராக உள்ளார். கடந்த 2021ம் ஆண்டில் Dark Perceptin என்ற பெயரில் டெல்லியில் உள்ள பீகனிர் இல்லத்தில் தனியாக புகைப்பட கண்காட்சியை நடத்தினார். அதே ஆண்டு கொல்கத்தாவில் நடந்த இந்திய ஸ்டோரி கண்காட்சி எனும் புகைப்பட கண்காட்சியில் பங்கேற்று இருந்தார்.
இந்நிலையில் தான் ரெய்ஹான் வதேரா, டெல்லியை சேர்ந்த அவிவா பெய்க் என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில் தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இருவீட்டார் சம்மதத்துடன் இந்த திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
தற்போது சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்துள்ள நிலையில் நாளை ராஜஸ்தானில் உள்ள ரந்தம்பூரில் பெரிய விழாவாக நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர்களின் திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. நாளை நடக்கும் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
பிரியங்கா காந்தியின் மருமகளாகப்போகும் அவிவா பெய்க் டெல்லியை சேர்ந்தவர். 25 வயது நிரம்பிய அவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. தந்தை பெயர் இம்ரான் பெய்க். இவர் தொழிலதிபராக உள்ளார். தாய் பெயர் நந்திதா பெய்க். இவர் இன்டீரியர் டிசைனராக உள்ளார்.
இவர்களின் குடும்பம் டெல்லியில் தான் உள்ளது. அவிவா பெய்க்கும் போட்டோகிராபர் தான். இவர் தனது பள்ளிப்படிப்பை டெல்லியில் முடித்தார். ஜார்னலிசம் மற்றும் கம்யூனிகேஷன் படிப்பை ஓபி ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அதோடு Atelier 11 என்ற போட்டோகிராபிக் ஸ்டூடியோ மற்றும் புரோடக்சன் நிறுவனத்தின் இணை நிறுவனராக அவிவா பெய்க் உள்ளார்.
அதுமட்டுமின்றி அவிவா பெய்க் தனது தாய்க்கு உதவியாக இன்டீரியர் டிசைனராகவும் பணியாற்றி வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் தேசிய அளவிலான கால்பந்து வீராங்கனையாகவும் இருந்துள்ளார்.
மேலும் அவிவா பெய்க் மற்றும் பிரியங்கா காந்தியின் குடும்பத்தினர்மிக நெருக்கமான பந்தம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அவிவா பெய்க்கின் தாய் நந்திதா பெய்க் தான் சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் திறக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தின் இன்டீரியர் டிசைனிங் பணியை செய்து கொடுத்தார்.
முன்னதாக அவிவா பெய்க் 3 நாட்களுக்கு முன்பு பிரியங்கா காந்தியின் மகன் ரெய்ஹான் வதேராவுடன் சேர்ந்து இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து 3 ‛ஹார்ட் சிம்பளை' பகிர்ந்து இருந்ததோடு அதனை ஹைலைட் ஆப்ஷனில்‛சேவ்' செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications