குழப்பம் ஏற்படுத்துறாங்க!.. எடப்பாடி பழனிச்சாமியுடன் ராகுல் பேசவே இல்லை.. ஒரே போடு போட்ட காங்கிரஸ்
டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு கோரி தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போனில் தொடர்பு கொண்டு பேசவில்லை என காங்கிரஸ் கட்சியின் ஊடகபிரிவுத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை உருவாக்கி பொதுச் செயலாளராக அமர எடப்பாடி பழனிச்சாமி காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கு தடையாக இருக்கும் ஓபிஎஸ்ஸை கட்சியிலிருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவில் கடந்த மாதம் 14 ஆம் தேதி முதல் பல்வேறு கலாட்டாக்கள் நடந்து வருகின்றன. டெல்லி தலைமையின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நிறைய எம்எல்ஏக்கள் இருப்பதால் டெல்லி தலைமை அவரைத்தான் ஆதரிக்கும் என்றும் சொல்லப்பட்டது.

குடியரசுத் தலைவர் தேர்தல்
இந்த நேரத்தில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பாஜக சார்பில் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டனர். பாஜகவின் கூட்டணியிலிருந்த அதிமுகவிடம் பாஜக மேலிட பொறுப்பாளர் சி டி ரவி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஆதரவு கேட்க ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை தனித்தனியாக சந்தித்தனர்.

பொதுக் குழு
அதிமுக பொதுக் குழுவில் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்ட நிலையில் அவர் நேராக டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பிரதமரை சந்திக்க நேரம் கிடைக்காவிட்டாலும் அவர் முக்கிய அமைச்சர்களை சந்தித்து தனது பிரச்சினைகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது பெரும்பாலான அமைச்சர்கள் ஓபிஎஸ்ஸுக்கு தைரியம் கொடுத்து அனுப்பியதாகவும் தெரிகிறது.

ஆச்சரியம்
இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்த போது விமான நிலையத்திற்கு வந்த எடப்பாடி பழனிச்சாமியை தோளில் தட்டி கொடுத்து பேசியிருந்தார். ஆனால் முர்மு வேட்புமனுதாக்கலின் போது ஓபிஎஸ் வணக்கம் வைத்தும் பிரதமர் மோடி கண்டுகொண்டதாக தெரியவில்லை என்றே சொல்லப்பட்டது.

அரசியல் விமர்சகர்கள்
இதற்கான காரணத்தை கேட்ட போது அரசியல் விமர்சகர்கள் கூறுகையில் "குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்பு கொண்டு பேசினாராம். இந்த ஏற்பாடு அரசியல் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் ஏற்பாட்டில் நடந்ததாம். இருவருக்கும் சுமார் 5 நிமிடங்கள் தொலைபேசி உரையாடல் நடந்ததாம்.

பிரதமர் மோடி
இதை உளவுத் துறை அதிகாரிகள் பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாகவும் இதனால் பிரதமருக்கு எடப்பாடி பழனிச்சாமி மீது கோபத்தை கொடுத்ததாகவும்" தெரிவித்தனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியுடன் ராகுல் காந்தி பேசவில்லை என காங்கிரஸ் மறுத்துள்ளது.

காங்கிரஸ் மறுப்பு
ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் நிறுத்திய பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தருமாறு எடப்பாடி பழனிச்சாமியுடன் ராகுல் காந்தி எந்தவித தொலைபேசி உரையாடலையும் வைக்கவில்லை என்றார்.தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மறுத்துள்ளார். ஒரு செய்தித்தாள் செய்தியை சுட்டிக் காட்டி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் எடப்பாடி பழனிச்சாமியுடன் ராகுல் காந்தி பேசவில்லை. இது பொய்யான தகவல், அது போன்ற தொலைபேசி உரையாடல் அவர்களுக்குள் நடக்கவில்லை. திமுக- காங்கிரஸ் கூட்டணியிடையே உள்ள நல்லுறவை சிதைப்பதற்காகவும் வலுவிழப்பதற்காகவும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும் இது போன்ற வதந்திகளை சிலர் பரப்புவதாக குற்றம்சாட்டினார்.
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications