டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை பிற்பகல் 1 மணி வரை டைம்.. முடிந்தால் வாங்க.. அமித் ஷாவிற்கு நேரடியாக சவால்விட்ட கெஜ்ரிவால்!

பாஜக கட்சியால் டெல்லிக்கான முதல்வர் வேட்பாளரை நாளை பிற்பகல் ஒரு மணிக்குள் தெரிவிக்க முடியுமா என்று டெல்லி முதல்வர் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக கட்சியால் டெல்லிக்கான முதல்வர் வேட்பாளரை நாளை பிற்பகல் ஒரு மணிக்குள் தெரிவிக்க முடியுமா என்று டெல்லி முதல்வர் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார்.

டெல்லி சட்டசபை தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. இதற்காக பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி முடிவடைகிறது.

இங்கு பாஜக, ஆம் ஆத்மி இடையில்தான் தீவிரமாக போட்டி நடந்து வருகிறது. டெல்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அங்கு வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11-ஆம் தேதியும் நடைபெறும்.

முதல்வர் பழனிச்சாமியை அவதூறாக பேசிய வழக்கு.. நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்முதல்வர் பழனிச்சாமியை அவதூறாக பேசிய வழக்கு.. நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்

செய்தியாளர்

செய்தியாளர்

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அளித்த பேட்டியில், பாஜகவில் யாருக்காவது என்னிடம் நேரடியாக விவாதம் செய்ய துணிச்சல் இருக்கிறதா. நாளை வரை உங்களுக்கு நேரம் தருகிறேன். முடிந்தால் என்னிடம் விவாதம் செய்யுங்கள். யாராவது ஒருவராவது அதற்கு தயாராக இருக்கிறீர்களா என்று பார்க்கலாம்.

முடியுமா

முடியுமா

நான் டெல்லிக்கு என்ன செய்தேன் என்பதை அடுக்குவேன். நீங்கள் அதை இல்லை என்று நிரூபிக்க முடியுமா. டெல்லி மக்களுக்கு நான் என்ன செய்தேன் என்பது தெரியும். நான் அதை நிரூபிக்கவும் தயார். உங்களால் முடியுமா. பாஜக கட்சியால் டெல்லிக்கான முதல்வர் வேட்பாளரை நாளை பிற்பகல் ஒரு மணிக்குள் தெரிவிக்க முடியுமா? நாளை வரை நேரம் தருகிறேன். உங்களால் முதல்வர் வேட்பாளர் யார் என்று சொல்ல முடியுமா?

பெரிய சவால்

பெரிய சவால்

அமித் ஷா மக்களிடம் வெற்று காசோலையில் கையெழுத்து வாங்க நினைக்கிறார். பாஜகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்றே சொல்லாமல், பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்கிறார். மக்கள் அப்படி கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்க என்ன முட்டாளா? நீங்கள் எதுவுமே சொல்லாமல் தேர்தலை சந்திப்பீர்கள். மக்கள் உங்களிடம் கேள்வியே கேட்காமல் வாக்களிக்க வேண்டுமா?

டெல்லி முதல்வர்

டெல்லி முதல்வர்

உங்கள் கட்சியில் டெல்லி முதல்வராக தகுதியாக யாருமே இல்லை. அதனால்தான் உங்களால் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. தேர்தல் முடிந்த பின் யாராவது முட்டாளை முதல்வராக அறிவிப்பீர்கள். இதை எல்லாம் ஏற்க முடியாது. முடிந்தால் நீங்கள் முதல்வர் வேட்பாளரை அறிவியுங்கள். இல்லையென்றால், தேர்தல் தோல்வியை இப்போதே ஒப்புக்கொள்ளுங்கள், என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Delhi Assembly Election: Deadline till 1 PM Tomorrow, Can you announce, Kejriwal dares BJP directly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X