டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடைசியில் நடந்த டிவிஸ்ட்.. வந்த ஒரே ஒரு நல்ல செய்தியும் இப்படி ஆகிடுச்சே.. தலையில் துண்டை போட்ட பாஜக

டெல்லியில் சட்டசபை தேர்தலில் ஓஹ்லா தொகுதியில் பாஜக கட்சி தோல்வி அடைந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi assembly elections | BJP lose with small margins

    டெல்லி: டெல்லியில் சட்டசபை தேர்தலில் ஓஹ்லா தொகுதியில் பாஜக கட்சி தோல்வி அடைந்துள்ளது. கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில், அங்கு ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற்றுள்ளது. இந்த தொகுதி, டெல்லி சட்டசபை தேர்தலில் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதி ஆகும்.

    டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அக்கட்சி 58 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. டெல்லி தேர்தலில் அங்கு நடக்கும் ஷாகீன் பாக் போராட்டம் முக்கிய பங்கு வகித்தது.

    டெல்லியில் ஷாகீன் பாக் பகுதியில் கல்லூரி பெண்கள் வரை வயதான முதியவர்கள் வரை தீவிரமாக போராட்டம் செய்து வருகிறார்கள். டெல்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை அருகே இருக்கும் ஷாஹீன் பாக் பகுதி சிஏஏ போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது.

    டெல்லியில் பல தொகுதிகளில் சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவிய பரிதாப பாஜக டெல்லியில் பல தொகுதிகளில் சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவிய பரிதாப பாஜக

    என்ன தொகுதி

    என்ன தொகுதி

    இந்த நிலையில் டெல்லியில் ஷாகீன் பாக் போராட்டம் நடக்கும் பகுதியில் பாஜக காலையில் முன்னிலை பெற்றது. ஷாகீன் பாக் போராட்டம் நடக்கும் பகுதி ஓஹ்லா தொகுதிக்கு கீழ் வருகிறது. அங்கு பாஜக சார்பாக பிராம் சிங் போட்டியிடுகிறார். அதேபோல் ஆம் ஆத்மி கட்சி சார்பாக அமனதுல்லா கான் போட்டியிடுகிறார். இவர்களுக்கு இடையில் அங்கு கடுமையான போட்டி நிலவி வந்தது. காலை முழுக்க அங்கு பாஜகவின் பிராம் சிங் முன்னிலை வகித்தார்.

    டெல்லி தேர்தல் அடையாளம்

    டெல்லி தேர்தல் அடையாளம்

    டெல்லி தேர்தலை பாஜக கட்சி ஷாகீன் பாக் போராட்டத்தை முன்னிறுதித்தான் பிரச்சாரம் செய்தது. பாஜக தலைவர்கள் சென்ற இடம் எல்லாம் ஷாகீன் பாக் பற்றியே பேசினார்கள். மிக முக்கியமாக அமித் ஷா தான் சென்ற இடத்தில் எல்லாம் ஷாகீன் பாக் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தேர்தலில் வென்றால், ஷாகீன் பாக் பகுதியை சுத்தம் செய்வோம் என்று அமித் ஷா வெளிப்படையாக கூறினார்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் அமித் ஷாவின் இந்த பிரச்சாரம் டெல்லியில் பெரிய அளவில் எடுப்படவில்லை, மாறாக ஷாகீன் பாக் பகுதியில் மட்டும் பாஜக வெற்றிபெறும் நிலையில் இருந்தது. இது பாஜகவை சந்தோசப்படுத்தியது. ஆனால் திடீர் திருப்பமாக அங்கும் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஓஹ்லா தொகுதியில் பாஜக திடீர் பின்னடைவை சந்தித்தது. 10 சுற்றுக்கு பின் பாஜக பின்னடைவை சந்தித்தது. தற்போது அங்கு பாஜக தோல்வியை தழுவி உள்ளது.

    பாஜக தோல்வி

    பாஜக தோல்வி

    ஆம் ஆத்மி கட்சி சார்பாக அமனதுல்லா கான் அங்கு 83,735 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். பாஜகவின் பிராம் சிங் அங்கு தோல்வியை தழுவி உள்ளார். அவர் வெறும் 14,077 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். இந்த திடீர் திருப்பமும் தோல்வியும் பாஜகவை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஷாகீன் பாக் மக்கள் போராட்டம் காரணமாக அங்கு பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அங்கு மக்கள் நடத்தும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தினால் இந்த முடிவு வந்துள்ளது.

    உள்ளூர் மக்கள்

    உள்ளூர் மக்கள்

    ஓஹ்லா தொகுதியில் உள்ள மக்கள் பலர் அங்கு போராட்டம் செய்யவில்லை. ஷாகீன் பாக் பகுதியில் போராடும் மக்கள் பலர் வேறு தொகுதியை சேர்ந்தவர்கள். சிலர் ஹரியானவை சேர்ந்தவர்கள். வெளியூர் மக்களின் போராட்டத்தை உள்ளூரில் இருக்கும் ஓஹ்லா தொகுதி மக்கள் விரும்பவில்லை என்று செய்திகள் வெளியானது. ஆனால் அதையும் மீறி தற்போது டெல்லியில் ஓஹ்லாவில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. ஆம் ஆத்மி வென்றுள்ளது. அங்கு போராடும் மக்களை இந்த செய்தி சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    English summary
    Delhi Assembly Election Result: Shaheen Bagh is the only good news for BJP amidst loss in the capital.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X