டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இனி யூஸ் அன்ட் த்ரோ கப்புகளுக்கு நோ சொல்லுங்க! ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக்கிற்கு தடை

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் பாலிஸ்டிரின் மற்றும் எக்ஸ்பேண்ட் பாலிஸ்டிரீன் உள்ளிட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விநியோகம், இறக்குமதி, விற்பனை உள்ளிட்டவைகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகள் உடல்நலனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் கேடை விளைவிக்கும். இது மண்ணில் புதைந்தால் தாவரங்களுக்கும் நிலத்தடி நீருக்கும் கடும் பாதிப்பை தருகின்றன.

இத கடைசியா பார்த்துக்கோங்க! ஸ்ட்ரா, பட்ஸ் போன்ற ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை இத கடைசியா பார்த்துக்கோங்க! ஸ்ட்ரா, பட்ஸ் போன்ற ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை

பிளாஸ்டிக் தடை

பிளாஸ்டிக் தடை

எனவே இந்த பிளாஸ்டிக்கை தடை செய்ய மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஒரு முறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் கவர்களை மறுசுழற்சி செய்ய முடியாது. இது போன்ற கவர்கள் குப்பைகளில் மட்கி பல ஆண்டுகளாக தேக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை

ஜூலை 1 ஆம் தேதி முதல் தடை

இந்த நிலையில் வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அது போல் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களையும் வரும் 1 ஆம்தேதி முதல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 பிளாஸ்டிக் பயன்பாடு

பிளாஸ்டிக் பயன்பாடு

இந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் இருக்கிறதா என்பதை கண்காணிக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்களை ஏற்படுத்தவுள்ளன.

பிளாஸ்டிக் குச்சிகள்

பிளாஸ்டிக் குச்சிகள்

பலூன்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகளால் செய்யப்பட்ட காது குடையும் பஞ்சு, ஐஸ்கிரீம் குச்சிகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் கிளாஸ்கள், 100 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், ஃபோர்க் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் கத்திகள், ஜூஸ் உறிஞ்சும் ஸ்டிராக்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

English summary
India to ban single usage plastic from July 1, says Environment minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X