டிரம்புடன் கைகோர்க்கும் இந்தியா.. ரூ27,000 கோடிக்கு பெரிய டீல்.. கைக்கு வரும் பி 81 விமானம்
டெல்லி: அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ.27 ஆயிரம் கோடிக்கு நவீனரக விமானங்களை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது. P-8I என கூறப்படும் இந்த விமானம் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்பில் கலக்கும். இதற்காக ரூ. 3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.27,000 கோடி) மதிப்பில் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீதம் வரியை போட்டார். நம் நாடு அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக கூறி பரஸ்பர வரி என்ற வகையில் 25 சதவீதம், உக்ரைனில் போர் புரிந்து வரும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீதம் என்று 50 சதவீதத்தை விதித்தார்.
18 சதவீதம் வரி குறைப்பு
சமீபத்தில் டொனால்ட் டிரம்ப், மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வர்த்தக ஒப்பந்தம் பற்றி பேசியதோடு, பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார்.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டு அமெரிக்கா அல்லது வெனிசுலாவிடம் இருந்து வாங்கும் என்றும், அமெரிக்காவுடனான வர்த்தகம் 500 பில்லியன் டாலராக உயர்த்த உறுதியளிக்கப்பட்டதாகவும் கூறினார்.
ரூ.27 ஆயிரம் கோடிக்கு..
இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு மீண்டும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இப்படியான சூழலில் தான் அமெரிக்காவிடம் இருந்து சுமார் ரூ.27 ஆயிரம் கோடிக்கு நவீனரக விமானங்களை இந்தியா வாங்க முடிவு செய்துள்ளது.
P-8I என கூறப்படும் இந்த விமானம் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு மற்றும் கடல்சார் கண்காணிப்பில் திறம்பட செயல்படும். இதற்காக ரூ. 3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.27,000 கோடி) மதிப்பில் ஒப்பந்தம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடல்சார் கண்காணிப்பு மேம்படும்
இந்திய கடற்படை தற்போது தமிழ்நாட்டின் அரக்கோணம் மற்றும் கோவாவில் அமைந்துள்ள விமான தளங்களில் கிழக்கு மற்றும் மேற்கு கடல்சார் பகுதிகளைக் கண்காணிக்க 12 P-8I ரக விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
தற்போது புதிதாக 6 பி-8ஐ விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொள்ள திட்டமிப்பட்டுள்ளது.
ஸ்பெஷல் என்ன?
இந்த பி -81 ரக கடல்சார் ரோந்து விமானம் போயிங் நிறுவனத்தின் தயாரிப்பாகும். இந்த விமானம் 41,000 அடி உயரம் வரை பறக்க முடியும். இந்த விமானத்தில் anti Ship ஏவுகணைகளை பொருத்த முடியும்.
அதேபோல் Cruise வகை ஏவுகணைகளை பொருத்தி துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். AN/APY-10 ரேடார் உள்ளதால் துல்லியமாக படம் பிடிக்க முடியும். அதேபோல் MAD அமைப்பின் மூலமாக நீர்மூழ்கி கப்பல்களை கண்காணிக்கும் திறன் கொண்டது.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த விமானம் கடல் ரோந்து பணியில் முக்கிய பங்காற்றி வருகிறது. இதனால் மீண்டும் இந்த விமானங்களை இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து வாங்க உள்ளது.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
வளைகுடாவின் மிக பெரிய பாலத்தை தாக்கி அழித்த அமெரிக்கா.. அதிர்ச்சியில் ஈரான்! உச்சக்கட்ட பதற்றம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது?












Click it and Unblock the Notifications