தலைநகரை முடக்கிய கொரோனா.. 750 டாக்டர்களுக்கு பாதிப்பு.. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம்
டெல்லி: உலகம் முழுவதையும் ஆட்டிபடைத்து வரும் ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவையும் ஆட்டிபடைத்து வருகிறது. ஓமிக்ரான் காரணமாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,50,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதியானது.
Recommended Video
தலைநகர் டெல்லியை ஓமிக்ரான் வைரசும், கொரோனாவும் சேர்ந்து போட்டு தாக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20,181 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களையும் கொரோனா குறிவைத்து தாக்கி வருகிறது.

750 டாக்டர்களுக்கு கொரோனா
டெல்லியில் உள்ள 6 பெரிய மருத்துவமனைகளில் இருந்து 750 மருத்துவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் லேசான அறிகுறிகளை கொண்டுள்ளனர் என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாகும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

டாக்டர்கள் பற்றாக்குறை
ஆனால் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவமனைகளில் நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க, அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் பற்றாக்குறை நிலை உள்ளது. இதேபோல் டெல்லி எய்ம்ஸ்(AIIMS) மருத்துவமனையிலும் கொரோனவால் பாதிக்கப்பட்ட 350 ரெசிடென்ட் டாக்டர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

'சமாளித்து வருகிறோம்'
இது தொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த டாக்டர் ஒருவர் கூறுகையில், ' எய்ம்ஸ் மருத்துவமனையில் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தடை ஏதும் வந்து விடக்கூடாது என்பதற்காக இருக்கக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்களை வைத்து நிலைமையை சமாளித்து வருகிறோம்' என்று கூறினார்.

வெளிநோயாளிகள் பிரிவு மூடல்
கடந்த 24 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எய்ம்ஸில் பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது.டெல்லி அரசு மருத்துவமனையான லோக் நாயக்கில் மருத்துவர்கள் பற்றாக்குறை காரணமாக வெளிநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதேபோல் டெல்லியில் மத்திய அரசால் நடத்தப்படும் ஆர்எம்எல் மருத்துவமனையில், 90 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications