பகுதி நேர சூரிய கிரகணம்.. டெல்லி, குருசேத்திராவில் எப்படி இருக்கு பாருங்க.. கண்கவரும் போட்டோக்கள்
டெல்லி: இந்தியாவில் பகுதிநேர சூரியக்கிரகணம் இன்று மாலை 4.29 மணிக்கு துவங்கிய நிலையில் டெல்லி, குருக்சேத்திராவில் தோன்றிய சூரியகிரகணத்தின் போட்டோக்கள் வெளியாகி உள்ளன.
வானில் தினமும் அரிய பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதில சில நிகழ்வுகளை மக்களால் காண முடியும். அதில் ஒன்று தான் சூரியகிரகணம்.
சூரியணுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் வருவதை தான் சூரியகிரகணம் என்கிறோம். இதில் சந்திரன், சூரியனை முழுமையாக மறைத்தால் முழு சூரியகிரகணம் எனவும், பகுதியளவு மட்டும் மறைத்தால் பாதியளவு சூரியகிரகணம் எனவும் அழைக்கிறோம்.

முதல் மற்றும் இறுதி சூரியகிரகணம்
2022ம் ஆண்டின் முதல் சூரியகிரகணம் இன்று ஏற்படுகிறது. இதுதான் இந்த ஆண்டு இறுதியான சூரியகிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது. அதாவது இந்த ஆண்டு இனி சூரியகிரகணம் ஏற்படாது. இத்தகைய சிறப்பு மிகுந்த இந்த சூரியகிரகணம் என்பது பகுதி சூரியகிரகணமாக இருக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதாவது பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே வரும் சந்திரன் சூரியனின் முழு பகுதியையும் மறைக்காது. சூரியனின் குறிப்பிட்ட பகுதியை பூமியில் இருந்து நம்மால் காண முடியும்.

இமாச்சலில் 55 சதவீதம்
இந்த சூரியகிரகணம் அதிகபட்சமாக இமாச்சலப்பிரதேசத்தில் 55 சதவீதம் பார்க்க முடியும். இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் இன்று மாலை மாலை 4.29 மணிக்கு துவங்குவதாக கூறப்பட்டது. அதன்படி சூரியகிரகணம் துவங்கி நடந்து வருகிறது. இந்த சூரியக்கிரகணம் உச்சக் கட்டத்தை மாலை 5.30 மணிக்கு அடைவதோடு, மாலை 5.48 சூரியன் மறையும்போது கிரகணமும் முடிவுக்கு வருகிறது.

சிறப்பு ஏற்பாடுகள்
தீபாவளிக்கு மறுநாளான இன்று ஏற்பட்டுள்ள பகுதி நேர சூரிய கிரகணம் தோன்றி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சில பகுதிகளை தவிர அனைத்து இடங்களிலும் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். இதற்காக கோளரங்கள், அறிவியல் மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

டெல்லி-குருக்சேத்திராவில்
இந்நிலையில் தான் டெல்லியில் பகுதி நேர சூரியகிரகணம் தெரிந்தது. டெல்லியில் பழுப்பு நிறத்தில் சூரியக்கிரகணம் தோன்றி படிப்படியாக நிறம் மாறியது. ஹரியானா குருக்சேத்திராவில் சுட்டெரிக்கும் சூரியனின் நிறத்தில் கொதிக்கும் நெருப்பு பிளம்பாய் பகுதிநேர சூரியகிரகணத்தை ஏராளமானவர்கள் பார்த்து புனித நீராடினார்.
-
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications