ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிப்பு- முக்கிய ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் நாட்டின் கொரோனா பாதிப்பு நிலைமை தொடர்பாக பிரதமர் மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 3-வது அலை படுதீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.56 லட்சத்தை தாண்டியுள்ளது. நாட்டில் நேற்று மட்டும் 327 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்கள்
கொரோனாவுக்கு தற்போது சிகிச்சை பெறுகின்றன அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கியுள்ளது. இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேர நிலவரப்படி நாட்டில் 5,90,611 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் 3,000-த்தை கடந்துள்ளது.

2021 மே மாதம் போல...
இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதம் 29-ந் தேதி ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,553 ஆக இருந்தது. தற்போது மீண்டும் அந்த நிலைமை உருவாகி இருக்கிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரா, டெல்லியில் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது. டெல்லி, மகாராஷ்டிராவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,000-த்தை கடந்துள்ளது.

கட்டுப்பாடுகள், ஊரடங்கு அமல்
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு லாக்டவுன் அமலில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணியும் தீவிரமடைந்துள்ளது. நாட்டில் தற்போது 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி இன்று ஆலோசனை
இந்த நிலையில் கொரோனா பரவல் நிலவரம், கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
-
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications