டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய அரசு ஏதும் செய்யாது.. தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யுங்கள் மக்களே.. ராகுல் வேண்டுகோள்!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா காலத்தில் மக்களுக்கு செய்ய வேண்டிய தனது கடமையை மத்திய அரசு கைவிட்டுள்ளது. எனவே மக்கள் உதவி தேவைப்படுபவர்களுக்காக ஒன்று சேர வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் 2-வது அலை மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம் மதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா 3,50,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளையும் 4,120 உயிரிழப்புகளையும் உண்டாக்கி இருக்கிறது.

மோசமான நிலையில் இந்தியா

மோசமான நிலையில் இந்தியா

நாட்டில் இறப்புகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று தாங்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாகி செல்கிறது. கொரோனவை கட்டுப்படுத்தும் தடுப்பூசிகளுக்கு கூட தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகளுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை உலவுகிறது.

எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு

இந்தியா மீது இரக்கம் கொண்ட பல்வேறு உலக நாடுகளும் தங்களால் இயன்ற அளவுக்கு ஆதரவுக் கரங்களை நீட்டி வருகிறன்றன. மத்திய மோடி அரசின் நிர்வாகத் திறமையின்மையே நாடு இந்த அளவுக்கு அதலபாதாளத்துக்கு சென்றதுக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.

ராகுல் காந்தி தாக்கு

ராகுல் காந்தி தாக்கு

கொரோனா பாதிப்புக்கும், மக்களின் உயிரிழப்புக்கும் காரணம் பிரதமர் மோடிதான் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறார். இந்த நிலையில் இன்றும் கொரோனா தொடர்பாக மத்திய தாக்கி ட்வீட் போட்டுள்ளார் ராகுல் காந்தி.

உதவி செய்யுங்கள்

உதவி செய்யுங்கள்

ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், ' ஒரு நாடு நெருக்கடியை எதிர்கொள்ளும்போது, அந்த நாட்டை ஆட்சி செய்யும் அரசு மக்களிடமிருந்து இருப்பதை எடுக்கிறதா அல்லது மக்களுக்கு கொடுக்கிறதா என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். ஆனால் இப்போது இந்திய அரசு மக்களுக்கு செய்ய தனது கடமையை கைவிட்டுள்ளது. எனவே மக்கள் உதவி தேவைப்படுபவர்களுக்காக ஒன்று சேர வேண்டும்.இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது என்று கூறியுள்ளார்.

English summary
The federal government has abandoned its duty to the people during the Corona period. So people should come together for those who need help, said Rahul Gandhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X