டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

செல்லாது செல்லாது.. 3 டோஸ் போட்டாலும் கொரோனா வருமாம்! தலைசுற்ற வைக்கும் தகவலை சொன்ன ஆய்வு முடிவு!

Google Oneindia Tamil News

டெல்லி : உலகெங்கிலும் கொரோனா வைரஸின் தாக்கம் தலை தூக்கத் தொடங்கி இருக்கும் நிலையில் சீனாவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்றே கூறலாம். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி மூன்று தவணை போட்டிருந்தாலும் நோய் பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா அதற்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் தனது கிளைகளை விரித்து சமூக பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் சுமார் மூன்று ஆண்டுகள் கொரோனாவால் பல்வேறு இழப்புகளை சந்திக்க நேர்ந்தது.

இதையடுத்து லட்சக்கணக்கான மக்கள் கொரோனா காரணமாக உயிரிழந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை மிகத் தீவிரமாக இருந்தது. இதைனையடுத்து கொரோனா தடுப்பூசி திட்டமானது இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் தீவிர படுத்தப்பட்டு மருத்துவ வசதிகள் மற்றும் அரசுகளின் தீவிர முயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டது.

காதை கிழிக்கும் மரண ஓலம்.. சீனாவை நாலாபக்கமும் அலறவிடும் கொரோனா.. 36 நாட்களில் 60,000 பேர் மரணம்காதை கிழிக்கும் மரண ஓலம்.. சீனாவை நாலாபக்கமும் அலறவிடும் கொரோனா.. 36 நாட்களில் 60,000 பேர் மரணம்

 சீனாவில் பாதிப்பு

சீனாவில் பாதிப்பு

சில காலம் அமைதியாக இருந்த கொரோனா வைரஸ் தற்போது அடுத்தடுத்து உருமாறி மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனாவின் புதிய வேரியண்ட் ஆன கொரோனா பிஎஃப் 7 காரணமாக உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கின்றன. குறிப்பாக சீனா, அமெரிக்கா , ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்திருக்கும் நிலையில் சீனாவில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.

கொரோனா பிஎஃப் 7

கொரோனா பிஎஃப் 7

இதற்கு கொரோனாவின் பிஎஃப் 7 தான் காரணம் என ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். கடந்த சில நாட்களில் மட்டும் கோடிக்கணக்கானோர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழப்பு எண்ணிக்கையும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை குறித்து சீனா உரிய தகவலை தெரிவிக்காமல் இருப்பதாகவும் உண்மையான கணக்கு காட்டாமல் இருப்பதாக உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன இந்நிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 60,000 பேர் அங்கு கொரோனா பாதிப்பு காரணமாக உயிர் இழந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

தடுப்பூசி

தடுப்பூசி

இந்த நிலையில் தான் மூன்று தவணை தடுப்பூசி செலுத்தியவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. போலியோ சொட்டு மருந்து அம்மை தடுப்பூசி போல கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி 100% பாதுகாப்பை அளிக்கவில்லை எனவும் இந்த ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதே நேரத்தில் கொரோனா பாதிக்குப் உறுதி செய்யப்பட்டாலும் அறிகுறிகள் பெரிய அளவில் இருக்காது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

 அதிர்ச்சி தரும் முடிவு

அதிர்ச்சி தரும் முடிவு

இது தொடர்பாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆரம்ப காலங்களில் ஐந்தாயிரம் பேர் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள் என்றால் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் அபாயம் இருந்தது. ஆனால் தற்போது சுமார் 40 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் தடுப்பூசி முழுமையாக செலுத்திக் கொண்ட 100 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் அதிகரித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கு காரணம் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவது எனக் கூறியுள்ள ஆய்வாளர்கள் எத்தனை தடுப்பூசி செலுத்திருந்தாலும் கொரோனாவில் இருந்து 100% பாதுகாப்பு தரும் என்பதை உறுதி செய்ய மறுத்துவிட்டனர்.

 அறிகுறிகள்

அறிகுறிகள்

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று தாக்கும் அபாயம் இருக்கிறது எனவும் தடுப்பூசி செலுத்திருந்தாலும் எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும் என கூறுகின்றனர். பொதுவாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டாலும் மூக்கில் நீர் வடிதல் தொண்டை கரகரப்பு மூக்கடைப்பு போன்ற ஒரு சில அறிகுறிகளை தவிர காய்ச்சல் உடல் சோர்வு உடல் வலி தலைவலி போன்றவையும் ஏற்படலாம் சிலருக்கு மூச்சு விடுவதில் கூட சிரமம் இருப்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது.

English summary
At a time when the impact of the corona virus is starting to raise its head around the world, it can be said that China is going crazy. In this situation, a shocking information has been revealed in the study that the disease will be affected even if the corona vaccine has been administered for three times.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X