சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு.. முக்கிய உத்தரவு கொடுத்த உச்சநீதிமன்றம்!
டெல்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்திருந்தது. அதை எதிர்த்து ஏராளமான சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து முக்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.
சபரிமலை விஷயத்தில் மத சுதந்திரமா? பாலின சமத்துவமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பை கொடுத்தது. அதன்படி இனி அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு போகலாம் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்த தீர்ப்பு இந்து அமைப்புகளிடையே கடுமையான எதிர்வினையை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்து அமைப்புகள் இந்த தீர்ப்பை எதிர்த்து நேரடியாக உச்சநீதிமன்றத்தை நாடவில்லை. மாறாக இந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சீராய்வு மனுக்களுக்கு ஆதரவான ஆதாரங்களை திரட்டி கொடுப்பது, வழக்கறிஞர்களாக வாதங்களை முன்வைப்பது என்கிற பணிகளை மேற்கொண்டன.
2018 தீர்ப்புக்கு எதிராக 65க்கும் அதிகமான சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் நாயர் சர்வீஸ் சொசைட்டி, பந்தளம் அரச குடும்பம் சார்பில் தாக்கல் செய்பய்பட்ட மனுக்கள் முக்கியமானவை. இந்த 2 அமைப்புக்கும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தங்களது முழுமையான ஆதரவை தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கில் எந்த மாதிரியான உத்தரவு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
இன்று இந்த சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையில், இந்த வழக்குகள் 9
தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதி கூறியிருக்கிறார்.
ஏப்.7ம் தேதி முதல் இந்த வழக்குகள் மீதான விசாரணை தொடரும். இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் தங்களது எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். தற்போது அரசியல் சாசன அமர்வு வேறு ஒரு முக்கியமான வழக்கை விசாரித்து வருகிறது. இதனை தொடர்ந்து சபரிமலை வழக்கு விசாரணைக்கு வரும்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications