இந்தியாவில் தஞ்சம் அடைந்த பின் முதல் முறை.. பொதுநிகழ்ச்சியில் உரையாற்றிய ஷேக் ஹசீனா! ஆவேச பேச்சு
டெல்லி: வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த ஷேக் ஹசீனா முதல் முறையாக பொதுநிகழ்ச்சியில் ஆடியோ வாயிலாக உரையாற்றியிருக்கிறார். இதில் முகம்மது யூனுஸை கடுமையாக சாடினார். வெளிநாட்டு கைப்பாவையாக செயல்படும் முகம்மது யூனுஸ் அரசை தூக்கி எறிய வேண்டும். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.
வங்கதேசத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச அரசு வலியுறுத்தி வருகிறது.

பொது நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா
எனினும், இவ்விவகாரத்தில் இந்தியா, வங்கதேசத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. வங்கதேசத்தில் தற்போது முகம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்துள்ளது. அவரது ஆட்சியில் அங்கு வன்முறை வெறியாட்டம் நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. விரைவில் வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி அங்கு பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் தஞ்சம் அடைந்த பிறகு பொதுநிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா ஆடியோ வாயிலாக உரையாற்றியிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற வெளிநாட்டு செய்தியாளர்கள் மன்றத்தில் ஆடியோ மூலம் ஷேக் ஹசீனா ஆற்றிய உரையில் முகம்மது யூனுஸை கடுமையாக சாடினார். ஷேக் ஹசீனா கூறியதாவது:-
யூனுஸ் அரசை தூக்கி எறிய வேண்டும்
சட்டவிரோத ஆட்சியை நடத்தி வரும் முகம்மது யூனுஸ் நாட்டை பயங்கரவாதம், சட்ட ஒழுங்கின்மை, ஜனநாயக ஒருங்கிணைப்பு கொண்டதாக மாற்றி ஆட்சி நடத்தி வருகிறார். வங்கதேச அரசியல் அமைப்பு இறையாண்மை நெருக்கடியில் உள்ளாகியுள்ளது. வெளிநாட்டு கைப்பாவையாக செயல்படும் முகம்மது யூனுஸ் அரசை தூக்கி எறிய வேண்டும். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும்.
பேரழிவை நோக்கித் தள்ளுகிறார்
பயங்கரவாத யுகத்தில் மூழ்கியுள்ளது. முகம்மது யூனுஸ் ஒரு கொலைகார ஃபாசிஸ்ட், அதிகார வெறி பிடித்தவராக உள்ளார். பண மோசடிக்காரர். வங்கதேசத்தில் தற்போது வாழ்க்கைக்கும் சொத்துக்கும் பாதுகாப்பு இல்லை. நாட்டை காட்டிக்கொடுத்து முகம்மது யூனுஸ் நமது அன்புக்குரிய தாய்நாட்டை பேரழிவை நோக்கித் தள்ளுகிறார்" என்று கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
"வங்கதேசத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றுவோம்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்தான் ஷேக் ஹசீனா இந்த உரையை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வங்கதேச வம்சாவளியை சேர்ந்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனாவின் ஆடியோ ஒலிபரப்பப்பட்டது.
பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும்
ஷேக் ஹசீனா இதில் மேலும் பேசியதாவது:- வங்கதேசத்தில் சட்டவிரோத யூனுஸ் ஆட்சி நிர்வாகத்தை அகற்ற வேண்டும். ஜனநாயகத்தை மீண்டும் நிறுவ வேண்டும். நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்துவது அவசியம்.
யூனுஸ் குழுவின் நிழல் நீடிக்கும் வரை வங்கதேசத்தில் ஒருபோதும் நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் இல்லை. ஐக்கிய நாடுகள் அவை பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும். உண்மையை வெளிக்கொண்டு வருவதன் மூலமே நாட்டை முன்னேற்றம் அடைய வைக்க முடியும்" என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications