டிக்கெட் இருந்தா மட்டும்.. வட இந்திய ரயிலில் தென்கொரிய பயணி பட்ட பாடு! மறுநிமிடமே நடந்த அதிசயம்
டெல்லி: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த தென்கொரிய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர், கன்பர்ம் டிக்கெட் உடன் பீகாரில் ரயிலில் ஏறியிருக்கிறார். இந்திய ரயில்களை பற்றி அதிகம் தெரியாத அந்த சுற்றுலா பயணிக்கு உள்ளே சென்றதும் அதிர்ச்சி காத்திருந்தது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அங்கு நடந்த சம்பவம் தென்கொரிய பயணியை மெய்சிலிர்க்க வைத்தது
இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள மக்கள் அளிக்கும் விருந்தோம்பல், உபசரிப்பை கண்டு மெய்சிலிர்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துகள் அவ்வப்போது வைரலாகும். அதேநேரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சில நேரங்களில் தர்மசங்கடமான நிலையும் ஏற்படும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.

பொதுப்பெட்டியில் தென் கொரிய பயணி
அப்படியான ஒரு நிகழ்வுதான் தென்கொரியாவை சேர்ந்த ஒரு பயணிக்கு வட இந்தியாவில் ரயில் பயணத்தின் போது அரங்கேறியுள்ளது. பொதுவாக ரயில்களில் வட இந்தியாவுக்கு சென்றால் முன்பதிவு செய்தாலும் கூட அங்குள்ள பயணிகள் இருக்கைகளை அடாவடியாக ஆக்கிரமித்து கொள்வார்கள் என்று பலரும் கூறுவதை பார்க்க முடிகிறது.
அவ்வப்பொது இது தொடர்பான பதிவுகளும் வீடியோக்களிலும் வலைத்தளங்களில் வைரலாகும். இப்படிப்பட்ட சூழலில்தான், முன்பதிவு செய்து மூன்றாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டியில் பயணித்த தென்கொரியா பயணிக்கு கசப்பான பயண அனுபவமே நடந்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சீட்டை ஆக்கிரமித்து இருந்து உள்ளூர் பயணிகள்
தென்கொரியாவை சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். பீகாரின் முசாபர் நகரில் இருந்து ரயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து இந்த தென்கொரிய நபர், தனது இருக்கையை தேடி சென்றார். ஆனால், தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் உள்ளூர் பயணிகள் ஆக்கிரமித்து இருந்துள்ளனர்.
இதனால் என்ன செய்வதென்று தெரியாத அந்த கொரிய பயணி, ரயிலின் வாயில் அருகே லக்கேஜ் உடன் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த ரயில்வே போலீஸ் ஒருவர், அந்த தென்கொரிய பயணியிடம், விவரத்தை கேட்டுள்ளார். அப்போது, அவரது இருக்கையை டிக்கெட் இல்லாத பயணிகள் ஆக்கிரமித்துகொண்ட விஷயம் தெரிந்தது.
ஆர்பிஎஃப் போலீசாருக்கு பாராட்டு
இதையடுத்து, உடனடியாக இருக்கைக்கு சென்ற ரயில்வே போலீஸ், சீட்டை ஆக்கிரமித்து இருந்த பயணிகளை விரட்டியடித்து. இதையடுத்தே அந்த பயணி நிம்மதியாக பயணம் செய்துள்ளார். துரிதமாக செயல்பட்ட ரயில்வே போலீசின் செயலை பலரும் பாராட்டியுள்ள அதே நேரத்தில், பயணிகளின் பொறுப்பற்ற தன்மயையும் பலர் விமர்சித்து இருக்கிறார்கள்.
இச்சம்பவம் குறித்து ஒரு நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில் கூறியதாவது, "இந்திய ரயில்வேயின் பொதுப் பெட்டியில் நிலவும் மோதல்கள் அனைவருக்கும் தெரிந்ததே. எனினும், இருக்கையை விட மனித நேயம் உயர்ந்தது. இருக்கை காலியாக இருந்தும், இடம் கொடுக்க மறுத்தது குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது," என்று ஆதங்கப்பட்டார்.
கிண்டலாக பதிவிட்ட நெட்டிசன்கள்
பலர் இதே கருத்தை வலியுறுத்தி, பயணிகளின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். மற்றொரு நெட்டிசன் கூறும் போது, "தேவையான நேரத்தில் ஆர்.பி.எஃப் தலையிட்டு சரியானதைச் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பயணிகள், குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வரும் விருந்தினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும். அவர்களுக்கு கொடுக்கும் விருந்தோம்பல்தான் நம் நாட்டின் நற்பெயரைக் காக்கும்" என்று பதிவிட்டார்.
சில நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் நகைச்சுவகையாகவும் பதிவிட்டு இருந்தார். "பொதுப் பெட்டி என்றால் என்னவென்று கொரியப் பயணிக்குத் தெரியாமல் போயிருக்கலாம். தங்கள் நாட்டில் உள்ளதைப் போல சாதாரணமானதாகவே நினைத்திருப்பார்," என்று கூறியிருந்தார். மற்றொரு பயணி வெளியிட்ட பதிவில், "இந்திய ரயில்களில் பொது மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளை வெளிநாட்டுப் பயணிகள் தவிர்க்க வேண்டும்" என்று கூறினார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications