டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜனநாயக பண்டிகையை சிறப்பியுங்கள்.. - ஓட்டு போட மக்களை அழைக்கும் பிரதமர் மோடி!

By
Google Oneindia Tamil News

டெல்லி: ஜனநாயகத்தின் பண்டிகையை சிறப்பிக்கவேண்டும் என இளைஞர்களிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. உ.பி.யில் கடந்த 10-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது.

தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஐந்து மாநில மக்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் கோரிக்கை வைத்துள்ளார்.

தேவபூமியை பாஜக-வால் மட்டுமே பாதுகாக்க முடியும் - உத்தரகாண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி அதிரடி! தேவபூமியை பாஜக-வால் மட்டுமே பாதுகாக்க முடியும் - உத்தரகாண்ட் பிரசாரத்தில் பிரதமர் மோடி அதிரடி!

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்து ஜனநாயகத்தின் பண்டிகையை சிறப்பிக்கவேண்டும். குறிப்பாக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தேர்தல்

தேர்தல்

பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் வரும் மார்ச் 10ம் தேதி முடிவடைகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை வரும் மார்ச் 10ம் தேதி நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஏற்கெனவே முதற்கட்ட தேர்தல் முடிவடைந்திருக்கிறது. இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது.

பாஜக‌

பாஜக‌

இந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், மீண்டும் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக பிரசாரம் செய்து வருகிறது. உத்தரகாண்ட், கோவா, உத்தரப்பிரதேசம், மணிப்பூரில் பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தை சேர்த்து அனைத்து மாநிலத்திலும் வெற்றி பெற பாஜக தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறது.

ஐந்து மாநிலம்

ஐந்து மாநிலம்

சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் காலை 9 மணி நிலவரப்படி 9.45%; கோவா மாநிலத்தில் 11.04%; உத்தரகாண்ட் மாநிலத்தில் 5.15% வாக்குகள் பதிவாகி உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அனைத்துக் கட்சிகளும் இந்தத் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில்
ஈடுபட்டு வருகின்றன.

English summary
On five state assembly election, PM Modi on Twitter says that, I call upon all those whose are eligible to vote today to do so in record numbers and strengthen the festival of democracy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X