டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு.. நிர்மலா சீதாராமனைத் தொடர்ந்து ஜெய்சங்கரும் தமிழில் ட்வீட்

Google Oneindia Tamil News

Recommended Video

    இந்தியை திணிக்க முயன்றால் வேடிக்கை பார்க்க மாட்டோம்: முத்தரசன் எச்சரிக்கை

    டெல்லி: எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

    தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அளித்துள்ள பரிந்துரையில். மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி மொழியையும் கட்டாயம் ஆக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கல்வி அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் இருமொழி கொள்ளை தான் இருக்கும் என்றும் மும்மொழிக் கொள்கையை எந்த காலத்திலும் தமிழகம் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் தெரிவித்தார்.

    The National Education Policy as submitted to the Minister HRD is only a draft report. says Dr S Jaishankar

    திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அமமுக பொதுச்செயலாளர் தினகரன், விசிக தலைவர் திருமாவளவன் உள்பட பலரும் இந்தி திணிக்கப்பட்டால் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் போர் தொடுக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

    இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், "மத்திய அரசு மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே கல்வி குழுவின் வரைவை முன் எடுத்து செல்லும். அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும் ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் யார் மீதும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை" என கூறியுள்ளார்.

    இதேபோல், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பதிவில், "மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும். பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே "ஒரே பாரதம் உன்னத பாரதம்" "#EkBharatSreshthaBharat முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழை போற்றி வளர்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்" என கூறியுள்ளார்.

    English summary
    The National Education Policy as submitted to the Minister HRD is only a draft report. says External Affairs Minister Dr S Jaishankar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X