இஸ்ரேல் ஸ்பைவேர் "பெகாசஸ்" பயன்படுத்தி உளவு பார்க்கப்பட்டதா.. மத்திய அரசு விளக்கம்
டெல்லி: இஸ்ரேலிய ஸ்பைவேர் 'பெகாசஸ்' '(Pegasus)ஐப் பயன்படுத்தி இந்தியாவில், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் தொலைபேசி எண்கள் உளவு பார்க்கப்பட்டதாக டேட்டா கசிந்துள்ளது.
Recommended Video
வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் மற்றும் 16 ஊடக நிறுவனங்கள் இணைந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.
இந்த சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்போன்களின் முழு கட்டுப்பாடும் அதை கண்காணிப்பவருக்கு போய் விடும். அந்த செல்போனின் கேமராவை இயக்குவது, போனில் பேசும் உரையாடல் உட்பட அனைத்துமே உளவாளி கைகளுக்கு போய்விடும்.

உளவு குற்றச்சாட்டுகள்
இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அமைச்சர்களின் செல்போன்கள் கூட இப்படி உளவு பார்க்கப்பட்டு வருவதாக செய்தி வெளியான நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அரசிடம் ஊடகங்கள் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு, மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு விளக்கம்
மத்திய அரசின் அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா ஒரு வலுவான ஜனநாயகம், அதன் அனைத்து குடிமக்களுக்கும் தனியுரிமைக்கான (privacy) உரிமையை ஒரு அடிப்படை உரிமையாக வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த உறுதிப்பாட்டை மேம்படுத்துவதற்காக, தனிநபர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கும் சமூக ஊடக தளங்களின் பயனர்கள் வசதிக்காகவும் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா, 2019 மற்றும் தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு) விதிகள், 2021 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அடிப்படை உரிமை
சுதந்திரமான பேச்சுக்கான அடிப்படை உரிமை என்பது இந்தியாவின் ஜனநாயக அமைப்பின் அடிப்படை. திறந்த உரையாடலின் கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து தகவலறிந்த குடிமகனை உருவாக்கவே எப்போதும் பாடுபட்டோம்.

ஊடகங்கள் அவசரம்
இருப்பினும், இந்திய அரசுக்கு இது தொடர்பாக அனுப்பப்பட்ட கேள்விகள்தாள், கதை போல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உண்மைக்கு புறம்பானது மட்டுமில்லாமல், முதலிலேயே குற்றம்சாட்டும் முடிவோடு கேட்கப்பட்ட கேள்விகளாக உள்ளன. நீங்கள் ஒரு புலனாய்வாளர், வழக்கறிஞர் மற்றும் நடுவர் ஆகியோரின் பாத்திரத்தை வகிக்க முயற்சிக்கிறீர்கள் என்று தெரிகிறது. உங்கலால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் ஏற்கனவே நீண்ட காலமாக பொது களத்தில் உள்ளன.
உளவு சாப்ட்வேர் தொடர்பாக உரிய முறையில், முழுமையாக ஊடகங்கள் விசாரணை நடத்தாமல் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே விளக்கம்
ஏற்கனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தில், பெகாசஸ் மற்றும் இந்திய அரசுக்கு உள்ள தொடர்பு குறித்த கேள்விக்கு, அதற்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்று விளக்கம் அளித்தாகிவிட்டது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் பாராளுமன்றம் உட்பட பல இடங்களில் இதுபற்றி ஏற்கனவே விரிவாகப் பேசியுள்ளார். கடந்த காலங்களில், வாட்ஸ்அப்பில் பெகாசஸைப் பயன்படுத்துவது தொடர்பாக இதேபோன்ற குற்றச்சாட்டுகள் இந்திய அரசு மீது கூறப்பட்டன. அதில் உண்மையில்லை. இந்திய உச்சநீதிமன்றத்தில் வாட்ஸ்அப் உட்பட அனைத்து தரப்பினராலும், அது திட்டவட்டமாக மறுக்கப்பட்டது.

சட்டத்தில் உரிமை
இந்த செய்தி அறிக்கை, இந்திய ஜனநாயகத்தையும் அதன் நிறுவனங்களையும் அவமரியாதை செய்யும் நோக்கத்தோடு, யூகங்கள் மற்றும் மிகைப்படுத்தல்களை அடிப்படையாக கொண்டது. இந்தியாவில் ஒரு நன்கு நிறுவப்பட்ட ஒரு நடைமுறை உள்ளது. மின்னணு தகவல்தொடர்புகளை ஆய்வு செய்ய சட்டபூர்வமான குறுக்கீடுகள் செய்ய, இந்திய தந்தி சட்டம், 1885 இன் பிரிவு 5 (2) மற்றும் தகவல் தொழில்நுட்ப (திருத்த) சட்டம், 2000 இன் பிரிவு 69 ஆகியவற்றின் கீழ் தொடர்புடைய விதிகளின்படி வழி உள்ளது. தேசிய பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு விவகாரங்களில், யாரையாவது உளவு பார்க்க வேண்டுமானால் அதற்கு சட்டப்பூர்வமான அனுமதியை இந்த சட்டங்கள் வழங்குகின்றன.

யார் அனுமதி தேவை
தகவல் தொடர்பை குறுக்கீடு செய்து கேட்பது, கண்காணிப்பு உள்ளிட்டவை தேவை என்றால் அது சட்டப்படி செய்யப்படுகிறது. மத்திய உள்துறை செயலாளர் இதற்கான அனுமதியை வழங்குவார். தகவல் தொழில்நுட்பம் (தகவல் இடைமறிப்பு, கண்காணித்தல் நடைமுறை மற்றும் பாதுகாப்புகள்) விதிகள், 2009 இன் படி இந்த அதிகாரங்கள் மாநில அரசுகளுக்கும் உள்ளன.

மாநிலங்களும் உளவு பார்க்கலாம்
இவ்வாறு அனுமதி வழங்கப்பட்ட உளவுகளுக்கும் கூட கூடுதலாக ஒரு கண்காணிப்பு ஏற்பாடும் இந்தியாவில் உள்ளது. அதன்படி, மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான கமிட்டி, இதை மேற்பார்வை செய்யும். மாநில அரசு உளவு பார்க்க வேண்டி வந்தால், அந்தந்த மாநில தலைமைச் செயலாளர் தலைமையிலான குழுவால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications