Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உலக அளவில் பிரதமர் மோடி தான் டாப்.. 78% மக்கள் ஆதரவு! இந்திய வம்சாவளி ரிஷி சுனக்கிற்கு.. அடப்பாவமே

உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகெங்கும் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலை 'மார்னிங் கன்சல்ட்' வெளியிட்டுள்ளது. இதில் அதிகப்படியானோரின் ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார்.

நரேந்திர மோடி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் முறையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு கடந்த 2019இல் நடந்த தேர்தலிலும் வென்ற அவர் தொடர்ந்த 9 ஆண்டுகளாகப் பிரதமராக இருக்கிறார்.

இந்தியாவில் அவரது பாஜக தொடர்ச்சியாக பல்வேறு தேர்தல்களில் வென்று வருகிறது. இந்தியாவில் மட்டுமில்லாமல்.. உலக அளவிலும் பிரபலமான தலைவர்களில் ஒருவராகவும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளார்.

 உலக தலைவர்கள்

உலக தலைவர்கள்

இதற்கிடையே அமெரிக்காவைச் சேர்ந்த 'மார்னிங் கன்சல்ட்' என்ற நிறுவனம் எந்த நாட்டில் இருக்கும் தலைவருக்கு மக்களிடையே அதிகப்படியான ஆதரவு உள்ளது என்பதைக் கண்டறியும் ஆய்வை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. உலகெங்கும் இருக்கும் 22 முக்கிய தலைவர்களுக்கு அவர்களின் சொந்த நாடுகளில் மக்கள் செல்வாக்கு எந்தளவுக்கு உள்ளதைக் கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜன. 26 முதல் 31ஆம் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

 பிரதமர் மோடிக்கு முதல் இடம்

பிரதமர் மோடிக்கு முதல் இடம்

இதில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பிரதமர் நரேந்திர மோடி, 78% மக்கள் ஆதரவுடன் உலகின் மிகவும் பிரபலமான தலைவராக உள்ளார்.. மொத்தம் 22 நாடுகளில் அவர்கள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். இதில் தான் பிரதமர் நரேந்திர மோடி 78% ஆதரவுடன் முதல் இடத்தில் உள்ளார். அடுத்து மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரேஸ் மானுவல் லாபெஸ் ஒப்ராடோர் 68 சதவீத ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

 அடுத்தடுத்த இடங்கள்

அடுத்தடுத்த இடங்கள்

இவர்கள் இருவருக்கும் பிறகு அடுத்து மூன்றாவது இடத்தில் சுவிஸ் அதிபர் அலைன் பெர்செட் 62 சதவீத மக்கள் ஆதரவுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி 52% ஆதரவுடன் 4ஆவது இடத்திலும் பிரேசில் நாட்டின் புதிய அதிபர் லுலா டா சில்வா 50% மக்கள் ஆதரவுடன் 5ஆவது இடத்தில் உள்ளார். உலக வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் தலைவர்களான பைடன் மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் 40% ஆதரவுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

 ரிஷி சுனக் மீது அதிருப்தி

ரிஷி சுனக் மீது அதிருப்தி

பிரிட்டன் நாட்டின் பிரதமராகக் கடந்த ஆண்டு பதவியேற்றவர் ரிஷி சுனக். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர், இளம் வயது பிரதமர், பிரிட்டன் நாட்டின் முதல் இந்து பிரதமர் என்று பல்வேறு சிறப்புகளை இவர் பெற்றிருந்தார். இருப்பினும், தற்போதைய சூழலில் அவருக்கு மக்கள் ஆதரவு பெரியளவில் இல்லை. ரிஷி சுனக் 30% ஆதரவுடன் 16ஆவது இடத்தில் உள்ளார். பிரிட்டன் நாட்டில் சுமார் 58% மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியிலேயே உள்ளனர். அவருக்கு அடுத்த இடத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் 29% ஆதரவுடன் 17ஆவது இடத்தில் உள்ளார்.

 பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடிதான் கடந்த ஆண்டும் இந்தப் பட்டியலில் டாப் இடத்தில் இருந்தார். இந்த பட்டியலில் பல ஆண்டுகள் பிரதமர் மோடியே டாப் இடத்தில் இருந்துள்ளார். கடந்த 2020 மே 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிகபட்சமாக 84% மக்கள் ஆதரவு இருந்தது. குறைந்தபட்சம் என்று பார்க்கும் போது அது கொரோனா உச்சத்தில் இருந்த 2021 மே மாதத்தில் தான் அவருக்குக் குறைந்தபட்ச ஆதரவு இருந்துள்ளது. அப்போதும் 63% இந்திய மக்களின் ஆதரவு அவருக்கு இருந்துள்ளது.

 மோசம்

மோசம்

ஜப்பான், தென்கொரியா, நார்வே நாட்டு தலைவர்கள் இந்தப் பட்டியலில் கடைசி இடங்களைப் பிடித்துள்ளனர். அந்த நாடுகளில் அவர்களின் தலைவர்கள் மீது அதிருப்தி நிலவுவதையே இது காட்டுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஏழு நாட்கள் ஆய்வு நடத்தப்பட்டு அதன் சராசரியை வைத்து இந்தப் பட்டியலை அவர்கள் வெளியிட்டுள்ளனர். மார்னிங் கன்சல்ட் நிறுவனம் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அவர்கள் இந்தப் பட்டியலை உருவாக்கியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+