தர்மபுரியில் மாறுது கணக்கு! சௌமியா அன்புமணியை அதிரவைத்த ராமதாஸின் அந்த ஒரு முடிவு! பலே
தர்மபுரி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி, தர்மபுரி தொகுதியில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்து, தனது தீவிரப் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். ஏற்கனவே இந்தப் பகுதி பாமகவின் கோட்டையாகக் கருதப்படுவதாலும், அன்புமணி ராமதாஸ் இங்கு எம்பியாக இருந்து வெற்றி பெற்றவர் என்பதாலும், சௌமியா அன்புமணியின் வருகை தொடக்கத்தில் மிகுந்த பலமாகப் பார்க்கப்பட்டது. இப்போது சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போவது இவரா? என்று அதிர்ச்சி ஏற்பட்டு வருகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அனுபவம் கொண்ட சௌமியா.. எனவே, இந்த முறையும் இங்கு களம் காணும் சௌமியா அன்புமணி, தர்மபுரியின் நீண்டகால நீர் மேலாண்மைத் திட்டங்கள் மற்றும் விவசாய பிரச்சனைகளை முன்னிறுத்தி மக்களிடையே ஆதரவு திரட்டி வருகிறார்.

தர்மபுரி சட்டமன்ற தொகுதி
ஆனால், தருமபுரி அரசியல் களம் நேற்று யாரும் எதிர்பார்க்காத ஒரு திடீர் ட்விஸ்ட்டை சந்தித்துள்ளது.. அதாவது பாமக நிறுவனர் ராமதாஸ், தன்னுடைய மருமகள் சௌமியா அன்புமணியை எதிர்த்து, கட்சியின் தர்மபுரி மேற்கு மாவட்டச் செயலாளர் அ.சரவணனை, இதே தர்மபுரி தொகுதியில் வேட்பாளராகக் களம் இறக்கியுள்ளார்.
இந்தத் திடீர் அறிவிப்பு பாமக தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து தர்மபுரிக்கு உற்சாக வரவேற்புடன் வந்திறங்கிய சௌமியா அன்புமணியின் தரப்பு, இந்தத் தகவலால் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாம்.
சவுமியா அன்புமணி
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சரவணன், BA பட்டதாரி மற்றும் சொந்தமாக அச்சகம் நடத்தி வருகிறாராம்.. கடந்த 36 ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக இயங்கி வரும் இவர், அடிமட்டத் தொண்டர்களுடன் நெருக்கமான உறவையும் கொண்டிருப்பவர்.
ஒருபுறம் கட்சியின் அதிகாரப்பூர்வ முகம் என்று கருதப்படும் சௌமியா அன்புமணி, மறுபுறம் கட்சியின் நிறுவனரால் களம் இறக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர் என தர்மபுரி பாமக இப்போது இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது.
வன்னியர் வாக்குகள் சிதறுமா?
தர்மபுரி தொகுதியை பொறுத்தவரை வன்னியர் சமூக வாக்குகள் தான் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. தற்போது ஒரே கட்சியின் இரு துருவங்கள் மோதிக்கொள்வதால், இந்த வாக்குகள் ஒட்டுமொத்தமாகச் சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சௌமியா அன்புமணிக்கு தொகுதியில் உள்ள அறிமுகம் மற்றும் கட்சியின் மாநிலத் தலைமையின் பலம் ஒருபுறம் இருந்தாலும், சரவணன் உள்ளூர் செல்வாக்கு மிக்க நிர்வாகி என்பதால், அடிமட்டத் தொண்டர்களின் வாக்குகள் அவர் பக்கம் சாய வாய்ப்புள்ளது. இந்த உள்வீட்டுப் போரால் பாமகவின் வாக்கு வங்கி கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும், இது எதிரணிகளுக்குச் சாதகமாக அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தேமுதிகவின் மாஸ் என்ட்ரி
இந்த குழப்பங்களுக்கு நடுவே, தேமுதிகவும் தர்மபுரியில் தனித்துப் போட்டியிடுவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. பாமகவின் ஓட்டுகள் பிரியும் சூழலில், தேமுதிக பிரிக்கும் ஒவ்வொரு வாக்கும் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாக மாறும் என்றே தெரிகிறது.. அதுவும் பாமகவின் உள்முரண்பாட்டால் அதிருப்தியில் இருக்கும் நடுநிலை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் ஓட்டுகள் தேமுதிக அல்லது இதர மாற்றுக் கட்சிகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் நிலவும் இந்த விசித்திரமான அரசியல் சூழல், பாமகவிற்குள் இருக்கும் அதிகாரப் போட்டியையா அல்லது வியூக மாற்றத்தையா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் வேட்பாளர்களுக்குள் நிலவும் இந்த மோதல் போக்கு, தருமபுரி தொகுதியின் தேர்தல் முடிவை ஒரு பெரும் மர்மமாக மாற்றியுள்ளது..
ஓட்டுமொத்தமாக பார்த்தால், பாமக மற்றும் அதிமுக/திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த மன்சூரலிகான்.. கலைஞர் ஞாபகம் வந்துருச்சு சார்.. ஆடிப்போன போலீசார் -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
முதல்வர் வாகனத்தை மறித்த தேர்தல் பறக்கும் படை.. கூலாக அமர்ந்திருந்த ஸ்டாலின்! பைபாஸில் பரபரப்பு -
ஒரு சதுர அடி வெறும் ரூ.4.5.. மொத்தம் 25 ஏக்கர்! சீமான் தன் மனைவிக்கு வாங்கிய சொத்து! இடிக்குதே! -
பாலில் விழுந்த மாம்பழம்.. அன்புமணி கைக்கு மொத்தமாய் போன பாமக! வலை போட்டு வேட்பாளர்களை தேடும் அய்யா! -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
வேட்பு மனுக்களை என்னென்ன காரணங்களுக்கு நிராகரிக்க கூடாது? தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் -
கோவையை கைவிட்ட கம்யூனிஸ்டுகள்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாற்றிலேயே இப்படி நடப்பது இதுதான் முதல்முறை! -
ஆதவ் அர்ஜுனாவுக்கு ரூ.197 கோடி சொத்து.. விஜய் சேதுபதிக்கு 25 லட்ச ரூபாய் கடன் கொடுத்துள்ளாராம்! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
"150 கிராம் தங்கம், ரூ.39 லட்சம் சொத்து.. ரூ.5.11 லட்சம் கடன்.." சீமானின் சொத்து மதிப்பு இதுதான்












Click it and Unblock the Notifications