ஒருவருக்கு ஒரு பதவி! சாட்டை எடுத்த திமுக! கலக்கத்தில் ’மூத்த தலைகள்’ .. உற்சாகத்தில் உடன்பிறப்புகள்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திமுகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்பதை தனது தொகுதியான ஆத்தூரில் இருந்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எடுத்த நடவடிக்கையால் மாவட்டம் முழுவதும் உள்ள திமுக நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் தங்களுக்கு பதவி கிடைக்கலாம் என்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட திமுகவின் மிக மூத்த நிர்வாகியும், மாவட்டத்தில் இரு மாவட்ட செயலாளர்கள் இருந்தாலும் கட்சியின் முக்கிய முகமாக இருப்பவர் ஐ.பி.யார் என கட்சியினரால் அழைக்கப்படும் ஐ.பெரியசாமி.
கடந்த திமுக ஆட்சிக் காலங்களில் முப்பெரும் துறை அமைச்சராக இருந்த அவர், தற்போதைய திமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.

அமைச்சர் ஐ.பெரியசாமி
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும் அப்போதைய அதிமுக முக்கிய புள்ளியாக இருந்த நத்தம் விஸ்வநாதனை தோற்கடித்து அவரது அரசியல் வாழ்க்கைக்கு "கமா" வைத்தவர். இதனையடுத்து நடைபெற்ற தேர்தல் தன்னை எதிர்த்து போட்டுயிட்ட பாமக வேட்பாளர் திலகபாமாவை ஏறக்குறைய ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

அதிரடி நடவடிக்கை
கடந்த நகர்ப்புற மற்றும் உள்ளாட்சித் தேர்தளின் போது, திண்டுக்கல் மாவட்டத்தில் தொன்னூற்று ஒன்பது சதவீதம் வெற்றியை ஐ.பி உறுதி செய்தார் . பெரும்பாலான இடங்களில் மாநகர நகர பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் அவரது துணைவியார் தலைவர் துணைத் தலைவராக ஆக்கப்பட்டனர் எதிர்பார்த்த பலர் ஏமாற்றம் அடைந்த நிலையில் அவர்களை திருப்திபடுத்தும் வேலையில் இறங்கியுள்ளார்.

ஒருவருக்கு ஒரு பதவி திட்டம்
கட்சி மற்றும் ஆட்சி அதிகாரம் ஒருவரிடம் மட்டுமே இருப்பதை விரும்பாத ஐ.பி ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் தலைவராக இருப்பவர் கள் செயலாளர்களாக இருப்பதை தவிர்க்கும் விதமாக தனது தொகுதியான ஆத்தூரில் அய்யம்பாளையம் பேரூர் செயலாளராக செயல்பட்டு வரும் தனது உறவினரான ஐயப்பனை பதவியை ராஜினாமா செய்ய வைத்து தங்கராஜ் என்பவருக்கு பேரூர் பொறுப்பாளர் பதவி வழங்கி உள்ளார் இதேபோல் கன்னிவாடி பேரூர் செயலாளர் சண்முகத்திற்கு பதில் இளங்கோவன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் .

நிர்வாகிகள் கலக்கம்
ஆத்தூரில் தனது ஆட்டத்தைத் தொடங்கி வைத்துள்ள ஐபி மாவட்டம் முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி பேரூராட்சிகளில் தலைவராக செயல்படும் திமுக செயலாளர்களின் பதவி வேறு ஒருவருக்கு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் வரும் உட்கட்சித் தேர்தலில் நீண்ட நாட்களாக நகர.பேரூர் செயலாளர்களாக நீடித்து வந்த பலரையும் தூக்கிவிட்டு புதியவர்களை நியமிக்கும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் திண்டுக்கல் திமுக நிர்வாகிகளிடையே பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
-
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
முத்தரையர் ஓட்டை பிரித்த திமுக..ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்! நத்தம் விஸ்வநாதனை எதிர்க்கும் சேகேஎஸ்! -
Alangulam: ஆலங்குளத்தில் பூங்கோதைக்கு ஏமாற்றம்.. மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு! நேரடியாக மோதும் திமுக vs அதிமுக! -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
கம்யூனிஸ்ட்களுக்கு நோ.. கோவையில் காங்கிரஸ்க்கு அள்ளி கொடுத்த திமுக.. உடன்பிறப்புகள் அப்செட்












Click it and Unblock the Notifications