துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வினையாக வந்த "ட்யூ".. அந்த வீரரை மோசமாக மிஸ் செய்யும் இந்திய அணி.. திணறிய கோலி.. நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

துபாய்: இந்தியாவிற்கு எதிராக டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர்கள் மிக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்கள்.

இந்தியாவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் இன்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஒப்பனர்கள் சொதப்பிய நிலையில் கோலி மட்டுமே அதிரடியாக ஆடி 57 ரன்கள் எடுத்தார். பண்ட் 39 ரன்கள் எடுத்தார்.

பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட்

இதனால் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 151 ரன்கள் எடுத்தது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் இந்தியா 151 ரன்கள் எடுத்து இருந்தாலும் இது அவ்வளவு எளிதான இலக்கு கிடையாது என்றே கூறப்பட்டது. ஏனென்றால் துபாய் பிட்ச் இன்றும் மிகவும் ஸ்லோவாக இருந்தது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு இந்த ஸ்கோர் எளிதாக இருக்காது என்றே கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் தொடக்கத்தில் இருந்தே பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தியது. முதல் ஓவரில் மட்டுமே பாகிஸ்தான் கொஞ்சம் நிதானம் காட்டியது.

துபாய்

துபாய்

அடுத்தது புவனேஷ்வர் குமார் வீசிய ஓவரிலேயே சிக்ஸ், பவுண்டரி என்று ரிஸ்வான் அடுத்தடுத்து அடித்து ஆட்டத்தில் வேகம் எடுத்தார். பவர் பிளேவில் இந்திய அணி எப்படியாவது விக்கெட் எடுக்க வேண்டும் என்று தீவிரம் காட்டியது. இதனால் பும்ரா, புவனேஷ்வர் குமார், சமி, வருண், ஜடேஜா என்று எல்லோருக்கும் மாற்றி மாற்றி ஓவர் கொடுக்கப்பட்டது.

விக்கெட்

விக்கெட்

ஆனால் பாகிஸ்தான் எந்த ஓவரிலும் பெரிதாக திணறவில்லை. வருண் வீசிய நான்காவது ஓவரில் வெறும் 2 ரன்கள் மட்டுமே சென்றது. வருண் ரன் கொடுக்கவில்லை என்றாலும் கூட அவரால் விக்கெட் எடுக்க முடியவில்லை. வருண் பவுலிங்கில் பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் பாகிஸ்தான் ஒப்பனர்கள் நிதானமாக ஸ்மார்ட் இன்னிங்ஸ் ஆடினார்கள். இதனால் வருண் ஓவரை தவிர மற்ற ஓவர்களில் ரன்கள் சென்றது.

வருண்

வருண்

பொதுவாக டி 20 ஆட்டங்களில் இந்தியா இப்படி திணறிய சமயங்களில் சாஹல்தான் விக்கெட் எடுத்து கொடுத்து இருக்கிறார். அதிலும் ஐபிஎல் போட்டிகளில் துபாயில் சாஹல் நன்றாக ஆடி உள்ளார். ஆனால் இன்று சாஹல் இல்லாமல் அந்த பிரேக் கிடைக்கவில்லை. சாஹலை இந்திய அணி மிஸ் செய்கிறதோ என்ற கேள்வி பவர் பிளே முடிவிலேயே எழுந்துவிட்டது.

பிரேக்

பிரேக்

சாஹல் போல யாருமே இன்று பிரேக் கொடுக்கவில்லை. அதோடு ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு காரணமாக ட்யூ ஏற்பட்டது. இதனால் பந்தும் ஈரமானது. இதனால் பந்தை பெரிதாக ஸ்பின் பவுலர்கள் ஸ்பின் செய்ய முடியவில்லை. பவுலிங் செய்ய கஷ்டமாக இருந்தது.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

அதேபோல் ஸ்விங்கும் செய்ய முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி எளிதாக ரன் சேர்க்க முடிந்தது. முதல் 10 ஓவரிலேயே இதனால் பாகிஸ்தான் எளிதாக 71 ரன்கள் எடுத்துவிட்டது. பல விஷயங்கள் இப்படி அணிக்கு எதிராக சென்றதால் மைதானத்தில் கோலி கொஞ்சம் இன்று விரக்தியாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
India vs Pakistan match in the T20 world cup: Due played major role against Men in Blue while bowling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X