இந்தியர்களுக்கு குட் நியூஸ்! இனி அமீரக விசா பெறுவது ரொம்பவே ஈஸி.. விதிகளில் வரும் மேஜர் மாற்றங்கள்
துபாய்: ஒவ்வொரு ஆண்டும் வேலைக்காக ஆயிரக் கணக்கான இந்தியர்கள் துபாய்க்குச் செல்லும் நிலையில், நடப்பாண்டில் அங்கு விசா நடைமுறைகளில் சில மிகப் பெரிய மாற்றங்கள் வந்துள்ளன. அவை என்ன மாதிரியான மாற்றங்கள்.. துபாய் செல்வோர் ஏன் இந்த மாற்றங்கள் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
இந்த 2026இல் ஐக்கிய அமீரகம் தனது குடிவரவு மற்றும் விசா விதிமுறைகளில் மிகப் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் துபாய் சுற்றுலா, குடும்ப ஸ்பான்சர்ஷிப், நிரந்தரக் குடியுரிமை பெறுதல் என அனைத்திற்கும் பொருந்தும். உங்கள் அமீரகப் பயணத்தைத் திட்டமிடுவதற்கு முன்பே இதைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

4 வகையான விசாக்கள்
ஐக்கிய அமீரகம் இப்போது நான்கு புதிய சிறப்பு விசா பிரிவுகளை அறிமுகப்படுத்தி உள்ளது.. இப்போது உலகமே ஏஐ பின்னால் போகும் நிலையில், AI தொழில்நுட்ப வல்லுநர்களைக் கவரும் வகையில் 'செயற்கை நுண்ணறிவு நிபுணர் விசாவை' அமீரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல கலைஞர்களுக்கான பொழுதுபோக்கு விசா மற்றும் குறிப்பிட்ட மாநாடு / விளையாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்போருக்கு Event விசா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கப்பல் / படகு மூலம் வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தனியாகக் கடல்சார் சுற்றுலா விசாவையும் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த 4 வகையான விசாக்களும் குறிப்பிட்ட சில பிரிவின் வல்லுநர்களுக்குப் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்!
ஸ்பான்சர்ஷிப் விதிகள்
அடுத்து ஐக்கிய அமீரக ஸ்பான்சர்ஷிப் விதிகள் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளன. துபாய் வருவோருக்குத் தேவையான பொருளாதார சப்போர்ட் இருப்பதை உறுதி செய்ய, மாத வருமானத் தொகைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் (கணவன் / மனைவி, குழந்தைகள்) அழைத்து வரும்போது மாத வருமானமாக 4,000 திர்ஹாம்கள் ஸ்பான்சர்ஷிப் தொகையாகக் கட்டாயம் இருக்க வேண்டும். அதேபோல இதர குடும்பத்தினருக்கு (சகோதரர்கள், தாத்தா பாட்டிகள்) 8,000 திர்ஹாம்களும் நண்பர்கள் / உறவினர்கள் அல்லாதவர்களுக்குக் குறைந்தபட்சம் 15,000 திர்ஹாம்கள் வருமானமும் அவசியமாகிறது..
ஆன்-அரைவல் விசா
சில குறிப்பிட்ட பிரிவு இந்தியர்களுக்கு ஐக்கிய அமீரகத்தில் ஆன்-அரைவல் விசா நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. அதாவது ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், நியூசிலாந்து, சிங்கப்பூர் அல்லது தென் கொரியா ஆகிய நாடுகளில் செல்லுபடியாகும் விசா / குடியுரிமை அனுமதி வைத்திருக்கும் இந்தியர்கள் அமீரகம் செல்ல முன்கூட்டியே விசா எடுக்கத் தேவையில்லை. அங்குப் போன பிறகு ஆன் அரைவல் விசாவை எடுத்துக் கொள்ளலாம்.
ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளின் விசா/ குடியுரிமை அனுமதி வைத்திருக்கும் இந்தியர்கள் முன்கூட்டியே விசா எடுக்க வேண்டாம் என்ற நடைமுறை இருந்த நிலையில், அந்த லிஸ்டில் இந்த நாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியர்களுக்கான விசா தலைவலி மேலும் குறையும்.
கோல்டன் விசா
ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நீண்ட அனுபவம் கொண்ட செவிலியர்கள், ஆசிரியர்கள், கன்டென்ட் கிரியேட்டர்கள், அதிகம் நன்கொடை கொடுப்போர் ஆகியோர் 5 அல்லது 10 ஆண்டு குடியுரிமை விசா பெறத் தகுதி பெற்றுள்ளனர். இதனால் சிறப்புத் திறன்கள் அல்லது தொண்டு பணிகளில் ஈடுபடுவோர் ஈஸியாக விசா பெறும் சூழல் உருவாகியுள்ளது.
இதுபோக UAE Humanitarian Permits என்ற புதிய வகை பெர்மிட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாட்டில் போர், இயற்கைச் சீற்றங்கள் / உள்நாட்டு கலவரங்களால் பாதிக்கப்பட்டோருக்கு இது வழங்கப்படுகிறது. இதற்கு ஸ்பான்சர் தேவையில்லை. கோரிக்கையின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த அனுமதி, ஒரு முக்கியமான மனிதாபிமான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
-
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
அமராவதிக்கு அங்கீகாரம்! முடிவுக்கு வந்த ஆந்திரா தலைநகர் குழப்பம்! சாதித்து காட்டிய சந்திரபாபு நாயுடு -
இனி E-20 petrol தான்.. பங்குகளுக்கு பறந்த உத்தரவு! பழைய வண்டிக்காரங்களுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications