அமீரகம் பக்கம் திரும்பும் கோடீஸ்வர இந்தியர்கள்.. துளியும் எதிர்பார்க்காத காரணம்! 5 பாயிண்டுகள்
துபாய்: ஐக்கிய அமீரகத்தின் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இது வரும் காலங்களிலும் கூட அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது. ரியல் எஸ்டேட் சந்தையில் இதுபோல இந்தியர்கள் முதலீடுகள் அதிகரிக்க என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம பார்க்கலாம்!
கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியர்கள் துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளுக்குச் செல்கிறார்கள். இருப்பினும், முன்பு வேலைக்காக மட்டும் இந்தியர்கள் அதிகம் அமீரகம் சென்றனர். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. செல்வாக்கு மிக்க இந்தியர்கள், அமீரக ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு செய்வது இப்போது அதிகரித்து வருகிறது.

5 காரணங்கள்
2025இன் முதல் சில மாதங்களில் மட்டும் இந்தியர்கள் சுமார் $44.6 மில்லியன் மதிப்பிலான சொத்துகளை வாங்கியுள்ளனர். இந்தியர்கள் இப்படி ஐக்கிய அமீரகத்தின் ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடு செய்ய 5 முக்கிய காரணங்கள் இருக்கிறதாம். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
முதல் மற்றும் முக்கியக் காரணம், கோல்டன் விசா திட்டம். இந்தத் திட்டம் 2022இல் விரிவுபடுத்தப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள், கல்வியாளர்கள், கண்டென்ட் கிரியேட்டர்கள், இ-ஸ்போர்ட்ஸ் வல்லுநர்கள் உட்படப் பல திறமைசாலிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தனர். புதிய கோல்டன் விசா திட்டம் சொத்து முதலீட்டு நிபந்தனைகளைக் குறைத்து, குடும்பத்தினர் நீண்ட காலம் தங்குவதற்கு அனுமதி அளித்தது. இது அமீரக ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு பெரிய உத்வேகம் அளித்தது.
கோல்டன் விசா
மேலும், 2022இல், அமீரகம் பரிந்துரை அடிப்படையிலான கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தகுதியுடைய இந்தியர்களுக்குச் சொத்து அல்லது வணிகத்தில் முதலீடு செய்யாமல் வாழ்நாள் முழுவதும் வசிப்பிடத்தைப் பெற இது வழிவகுத்தது. 2025இல் மேலும் பல பயன்கள் இதில் சேர்க்கப்பட்டன. இதன் மூலம், இந்தியர்கள் AED 2 மில்லியன் (சுமார் ₹4.8 கோடி) மதிப்புள்ள ஒரு சொத்தை வாங்கினால், ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் குடியிருப்பு அனுமதியைப் பெற முடியும். அதைப் புதுப்பித்து கொள்ளவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு.
அடுத்து இரண்டாவது காரணம், வாழ்க்கை முறை மற்றும் கவுரவம். அமீரகத்தில் ஒரு சொத்திற்கு உரிமையாளராக இருப்பது ஆடம்பர வாழ்க்கையை உறுதி செய்கிறது. மேலும், இது ஒருவருக்குக் கவுரவத்தையும் தருகிறது. துபாய் உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகும். அங்கு அரசு உயர்கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிப்பதால், உலகத் தரம் வாய்ந்த கல்வி எளிதில் கிடைக்கிறது. மேலும், வெறும் 4 மணி நேரத்தில் இந்தியாவுக்கும் வர முடியும். இதனால் உயர் வருமானம் கொண்ட இந்தியர்களின் டாப் சாய்ஸாக அமீரகம் மாறுகிறது.
வரி முறை
மூன்றாவது மற்றும் முக்கிய காரணம் அங்குள்ள வரி முறை. ஐக்கிய அமீரகத்தின் மிக பெரிய கவர்ச்சியே அதன் வரி விதிப்பு முறை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி செலுத்தத் தேவையில்லாத ஓரிரு நாடுகளில் அமீரகமும் முக்கியமானது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் அமீரகத்தின் ரியல் எஸ்டேடிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.
மேலும், அங்குப் பொருட்கள் மற்றும் சர்வீஸ்களுக்கு 5% மதிப்புக் கூட்டப்பட்ட வரி விதிக்கப்பட்டாலும் கூட அங்கு வசிப்போருக்கு, அது அமீரக குடியுரிமை பெற்றவராக இருந்தாலும் சரி வெளிநாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, வருமான வரி எதுவும் விதிக்கப்படுவதில்லை. இதுவும் முதலீட்டாளர்களை அமீரகம் நோக்கி ஈர்க்கிறது.
ரியல் எஸ்டேட்
அதேபோல அங்கு ரியல் எஸ்டேட் சந்தையில் கிடைக்கும் லாபமும் மற்றும் வாடகை வருவாயும் கூட கணிசமாகவே இருக்கிறது.. அதன் செழிப்பான பொருளாதாரம் காரணமாக, அங்குச் சொத்து வாங்குவோருக்குக் கணிசமான வருவாய் கிடைக்கிறது. அங்குப் பல நாடுகளில் இருந்து மக்கள் வந்தாலும் வீடுகளுக்குப் பற்றாக்குறை இருக்கிறது. இதனால் வீடுகளுக்குக் கணிசமான வாடகை கிடைக்கிறது. இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.
அங்கு வசிப்போருக்கு வெளிநாட்டினராக இருந்தாலும் கூட ஈஸியாக வீடு வாங்க லோன் கிடைக்கிறது. மாதம் Dh15,000 மற்றும் Dh20,000 வருமானம் ஈட்டுபவர்களுக்கும் ஈஸியாக 4%க்கும் குறைவான வட்டிகளில் அங்குள்ள வங்கிகள் லோன் தருகிறது. இதுவும் கூட அங்கு முதலீடுகள் அதிகரிக்கப் பிரதானக் காரணமாக இருக்கிறது.
-
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
பெற்றோரை பார்த்து கொள்ளவில்லை என்றால் "சம்பளம்" வராது.. வருகிறது புதிய சட்டம்! தண்டனைகள் என்ன? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications