என்னது ஒரு லட்சமா? சத்தியமங்கலத்தில் ‘ஷாக்’ கொடுத்த கரண்ட் பில்! அப்பறம் நடந்தது தான் ட்விஸ்டே!
ஈரோடு : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.94985 என குறுஞ்செய்தி வந்ததால் கூலித் தொழிலாளி அதிர்ச்சி அடைந்த நிலையில், அதன் பின்னர் அதிகாரிகள் கூறிய விளக்கம் சமூக வலைதளங்களில் விவாதத்திற்குள்ளாகி இருக்கிறது.
தமிழகத்தில் சுமார் 8 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயுத தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன, 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் தொடரும், 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50 கூடுதலாக மின் கட்டணம் மாற்றம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம்
ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கும் நிலையில் மின்கட்டண உயர்வுக்கு அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அடுத்த மாதம் முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பல பகுதிகளில் மின் கட்டண கணக்கீட்டு முறைகளில் குளறுபடி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

ரூ.94985 கட்டணம்
இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே கூலி தொழிலாளியின் வீட்டிற்கு மின் கட்டணம் ரூ.94985 என குறுஞ்செய்தி வந்ததால் கூலித் தொழிலாளி அதிர்ச்சி அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்குத்திபுரம் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவண்ணா. கூலி தொழிலாளியான இவர் மனைவி காளி மற்றும் தனது குழந்தைகளுடன் கிராமத்தில் உள்ள சிறிய வீட்டில் வசித்து வருகிறார்.

இலவச பயன்பாடு
வீட்டிற்கு தனது மனைவி காளி பெயரில் மின் இணைப்பு பெற்றுள்ளார். இவரது வீட்டிற்கு இரண்டு மாதத்திற்குள் முறை நூறு யூனிட் வரை மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார். இலவச பயன்பாடு என்பதால் இதுவரையிலும் மின் கட்டணம் செலுத்தவில்லை. இந்த நிலையில் அவரது செல்போன் எண்ணிற்கு மின் கட்டணம் ரூ.94985 செலுத்துமாறு குறுஞ்செய்தி வந்தது.

அதிகாரிகள் விளக்கம்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரேவண்ணா உடனடியாக தாளவாடி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் முறையிட்டார். மின்வாரிய அதிகாரிகள் மின்சார மீட்டர் கணக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால் தவறாக குறுஞ்செய்தி வந்துள்ளதாக அவரிடம் தெரிவித்ததையடுத்து ரேவண்ணா நிம்மதி அடைந்தார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications