For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத் சட்டசபை தேர்தல் LIVE : குஜராத் சட்டசபை தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

Google Oneindia Tamil News

காந்தி நகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டுப்பதிவு செய்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

14,382 வாக்குச்சாவடிகளில் இந்த தேர்தல் நடக்க உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் அங்கு டிசம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ம் தேதி வெளியாகும். இன்று தொடங்கியுள்ள தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 39 கட்சிகள் சார்பாக 339 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மற்றவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள். 2,39,76,760 பேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இதில் 5.74 லட்சம் பேர் 18-19 வயது கொண்ட முதல் தலைமுறை வாக்காளர்கள்.

குஜராத்தில் கடந்த 27 வருடமாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. குஜராத் பாஜகவின் கோட்டையாக உள்ளது. 1995ல் இருந்து அங்கு பாஜக ஆட்சிதான் உள்ளது. இந்த நிலையில்தான் இந்த முறை பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்த முறை பாஜக ஆட்சி முடிவிற்கு வருமா.. அல்லது காவி கொடி மீண்டும் ஏற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் குஜராத் சட்டசபை தேர்தல் அதிக கவனம் பெற்றுள்ளது.

Gujarat Assembly Election 2022 Live Updates of 1st phase voting in 89 seats

Newest First Oldest First
7:06 PM, 1 Dec

குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த பிரமாண்ட பேரணியின் போது, ​​ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக தனது கான்வாய்யை நிறுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
6:45 PM, 1 Dec

குஜராத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் தேர்தல் அதிகாரிகள்!
6:25 PM, 1 Dec

குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேரணியில் பெருந்திரளான மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு.
6:17 PM, 1 Dec

காந்தி நகர்: குஜராத் மாநில சட்டசபை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
5:51 PM, 1 Dec

குஜராத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் நடந்த முதல் கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
5:46 PM, 1 Dec

குஜராத்தில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடந்து வரும் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 56.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
5:37 PM, 1 Dec

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 50 கிமீ பேரணியை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி.
5:22 PM, 1 Dec

பிரதமர் மோடிக்கு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மோசமாக விமர்சித்து வருகிறார்கள்.. அவர்களுக்கு குஜராத் மக்கள் நிச்சயம் வாக்குகள் மூலம் பதிலளிப்பார்கள் - மத்திய அமைச்சர் அமித் ஷா
5:04 PM, 1 Dec

குஜராத் தேர்தலில் பாஜகவுக்கே சாதகமான நிலை உள்ளது. பிரதமர் மோடி மீது மக்களுக்கு அளப்பறிய அன்பு உள்ளது. முதல்வர் பூபேந்திர படேலும் மாநில வளர்ச்சிக்கான பணிகளை செய்து இருக்கிறார். இன்றைய வாக்குப்பதிவுகளில் சாதகமான முடிவுகள் இருக்கும் என்பதை நாங்கள் காண முடிந்தது என்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
4:46 PM, 1 Dec

குஜராத்தில் தேர்தல் ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் மறுபுறம் நடைபெற்று வருகிறது. பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா அகமதாபாத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அமித்ஷா, காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட்டு வருவதாக சாடியுள்ளார்.
4:25 PM, 1 Dec

அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை தாக்கியதாக நவ்சரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பியூஷ் பாய் படேல் இன்று குற்றம் சாட்டியிருந்தார். ஜாரி கிராமத்தில் வைத்து இன்று அதிகாலை தாக்குதல் நடைபெற்றதாக அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று நவ்சரி பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், 4-5 கார்களும் சேதப்படுதப்பட்டதாக அவர் புகார் கூறியிருந்தார். இதுதொடர்பாகவும் விசாரணை நடப்பதாக நவ்சரி பகுதியில் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
4:09 PM, 1 Dec

குஜராத்தில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு நடந்து வரும் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரப்படி 48.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக தாபி மாவட்டத்தில் 63.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
3:33 PM, 1 Dec

தேர்தல் வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதை உறுதி செய்யும் வகையில் 13,065 வாக்குச்சாவடிகள் வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நடந்து முடியும் வரை தொடர்ந்து இந்த வாக்குச்சாவடிகள் கண்காணிக்கப்பட்டுகொண்டே இருக்கும் என்றும்.. முறைகேடுகள் இன்றி வெளிப்படைதன்மையுடன் நடப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் குஜராத் மநில தேர்தல் ஆணையர் பி பாரதி தெரிவித்தார்.
3:06 PM, 1 Dec

பாஜக ஆட்சியால் குஜராத்தில் மக்கள் சலிப்படைந்துவிட்டதாக கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நைனா ஜடேஜா விமர்சித்துள்ளார்.
2:36 PM, 1 Dec

வாக்காளர்கள் சரியான முடிவை எடுத்து ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பியுமான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ஹர்பஜன் சிங் கூறுகையில், வாக்காளர்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும் என்றும் ஆம் ஆத்மிக்கு தங்கள் வாக்கினை செலுத்த வேண்டும் எனவும் நான் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
2:08 PM, 1 Dec

குஜராத்தில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது
2:07 PM, 1 Dec

மதியம் 1 மணி நிலவரப்படி 34.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது
1:51 PM, 1 Dec

ராஜ்கோட் மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 26 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அருண் மகேஷ் தெரிவித்தார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: ராஜ்கோட்டில் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்து வருகின்றனர். ராஜ்கோட் மாவட்டத்தில் நண்பகல் 12 மணி வரை 26 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதுவரை விரும்பத்தகாத சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து வருகிறோம்” என்றார்.
1:24 PM, 1 Dec

குஜராத்தின் ஆரவல்லி பகுதியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2-ஆம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது யோகி ஆதித்யநாத் கூறுகையில், "இன்று மிகவும் முக்கியமான நாளாகும். குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைவராக பிரதமர் ஆகியிருக்கும் பெருமையான நிகழ்வும் இன்று நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தையும் அவரது புகழும் உலக அளவில் அதிகரித்து இருப்பதை இந்த நிகழ்வு காட்டுகிறது" என்றார்.
12:55 PM, 1 Dec

கலோல் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: "நான் குஜராத் மண்ணின் மைந்தன். மோடியை யார் அதிகம் அவதூறு செய்கிறார்கள் என்ற போட்டியே காங்கிரஸ் கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியினர் எவ்வளவு சேற்றை வீசுகிறார்களோ அவ்வளவு தாமரை அதிகமாக பூக்கும்” என்றார்
12:44 PM, 1 Dec

குஜராத்தின் அகமதாபாத் நகரில் பாஜகவின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா, வாகனங்களில் பேரணியாக சென்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, குஜராத்தில் முதல்வராக மோடி இருந்த போது, பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு காணப்பட்டதாகவும், 24 மணி நேரமும் மின்சார வசதி மக்களுக்கு கிடைத்ததாகவும் குறிப்பிட்டார்.
12:26 PM, 1 Dec

குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பல மூத்த குடிமக்களும் ஆர்வத்துடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில், உமர்கம் பகுதியில் 100-வயதான மூதாட்டியான கமுபென் படேல் அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
12:15 PM, 1 Dec

குஜராத்தில் 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், கலோல் சட்டமன்ற தொகுதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். காந்திநகர் மாவட்டம் கலோல் நகரில் நடைபெற்று வரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த தொகுதியில் வரும் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
11:45 AM, 1 Dec

குஜராத்தின் சூரத் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பிறகு பேட்டி அளித்த அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ், "குஜராத்தில் இரட்டை என்ஜின் கொண்ட அரசாங்கத்திற்காக மக்கள் வாக்களிப்பார்கள். அனைத்து சமுதாய மக்களும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள். குஜராத்தில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும்" என்றார்.
11:34 AM, 1 Dec

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா குஜராத்தின் பாவ் நகரில் உள்ள ஹனோல் கிராமத்தில் தனது வாக்கினை பதிவு செய்கிறார். முன்னதாக தனது கிராம மக்களுடன் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார்.
11:18 AM, 1 Dec

குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில், ராஜ்கோட்டில் உள்ள வாக்குச்சாவடியில், முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களான மந்ததாசிங் ஜடேஜ் தாகூர் சாஹேப், காதம்பரி தேவி ஆகியோர் வாக்களித்தனர். வாக்களிப்பதற்காக பழமையான காரில் அவர்கள் வருகை தந்தது அங்கு கவனத்தை ஈர்த்தது.
11:09 AM, 1 Dec

கடர்கம் தொகுதியில் வாக்குப்பதிவு மந்தமாக நடைபெற்று வருவதாகவும் இதற்கு பாஜக ரவுடிகளே காரணம் என்று ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் தலைவர் கோபால் இடாலியா குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் அதிகாரிகளுக்கு பாஜகவினர் அழுத்தம் கொடுப்பதாகவும் இடாலியா குற்றம் சாட்டியுள்ளார்.
10:45 AM, 1 Dec

ஜாம்நகர் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பின் ஜடேஜா கூறுகையில், மக்கள் பெருமளவில் வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்றார். இவரது மனைவியும் ஜாம்நகர் தொகுதி பாஜக வேட்பாளருமான ரிவபா ஜடேஜா ராஜ்கோட்டில் தனது வாக்கினை இன்று பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
10:31 AM, 1 Dec

குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மேஹ்சனா தொகுதியில் அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் சாலை மார்க்கமாக வாகனத்தில் ரோட்ஷோ சென்றார். மேஹ்சனா தொகுதியில் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி அங்கு பிரசாரத்தில் முதல்வர் பூபேந்திர படேல் ஈடுபட்டார். பாஜகவினர் புடைசூழ வாகனத்தில் சென்றபடி கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
10:22 AM, 1 Dec

பாஜக சார்பாக ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். ரிவாபா ஜடேஜாவிற்கு எதிராக ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி நைனா ஜடேஜா தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதாவது காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நைனா ஜடேஜா ஆதரித்து பிரசாரம் செய்தார். வாக்குப்பதிவு நாளான இன்று நைனா ஜடேஜா கூறுகையில், "இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. ஜாம்நகரில் உள்ள பல குடும்பங்களில் இதுபோன்று வேறு வேறு கட்சிகளில் பலர் இருக்கின்றனர். உங்கள் சித்தாந்தத்தில் திருப்தி அடைந்து கொண்டு 100 சதவீதம் உழைப்பை கொடுக்க வேண்டும். சிறந்த ஒன்று வெற்றி பெறும" என்றார்.
READ MORE

English summary
Gujarat Assembly Election 2022 Live Updates of 1st phase voting in 89 seats across 14,382 booths.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X