ஓசூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாங்கள் நினைத்தால் பெரும்படை திரட்டி கர்நாடகாவுக்குள் நுழைய முடியும்: பிரேமலதா எச்சரிக்கை

Google Oneindia Tamil News

ஓசூர்: மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பெரிய அளவில் தொண்டர்களுடன் போராட்டம் நடத்தினார்.

Recommended Video

    மேகதாது அணை கட்டக்கூடாது... டிராக்டரில் வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய பிரேமலதா விஜயகாந்த்..!

    கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. இதற்கு முறைப்படி நீர் செல்லும் கீழ் பாசன பகுதியான தமிழ்நாட்டில் கர்நாடக அரசு அனுமதி வாங்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு தமிழ்நாட்டிடம் எல்லாம் அனுமதி வாங்க முடியாது நாங்கள் கண்டிப்பாக அணை கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறது.

    மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கான நீர் வரத்து குறையும், முக்கியமாக காவிரி கடைமடை பகுதிக்கு நீர் செல்வது தடைபடும். இது தமிழ்நாட்டின் விவசாயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

    ZOOM மீட்டிங் போட்டாலும் ஒன்னும் மாற்ற முடியாது.. காங்கிரஸ் மீது கரு. நாகராஜன் அட்டாக்ZOOM மீட்டிங் போட்டாலும் ஒன்னும் மாற்ற முடியாது.. காங்கிரஸ் மீது கரு. நாகராஜன் அட்டாக்

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    இதனால் தமிழ்நாடு அரசியல் கட்சிகள் ஒரே குடையின் கீழ் வந்து மேகதாது திட்டத்தை எதிர்த்து வருகிறது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு ஏற்கனவே இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்திவிட்டது. தமிழ்நாடு அரசியல் கட்சிகள் இது தொடர்பாக பிரதமர் மோடியையும் சந்தித்துவிட்டன. அதேபோல் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் தனது சந்திப்பில் மேகதாது அணைத்திட்டம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

    போராட்டம்

    போராட்டம்

    இந்த நிலையில் மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஓசூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று போராட்டம் நடத்தினார். கர்நாடகா மாநிலம் பெங்களூர் எல்லை அருகில் ஓசூரில் போராட்டம் நடத்தப்பட்டது. தேமுதிக தொண்டர்கள் பலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்ட களத்தில் டிராக்டர் ஓட்டிச் சென்று தேமுதிகவினர் கோஷம் எழுப்பினர்.

    பேச்சு

    பேச்சு

    டிராக்டரில் பயணித்தபடி பிரேமலதாவும் கர்நாடக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, ஓசூர் எல்லைவரை வந்துவிட்டோம். கர்நாடகா அதிக தொலைவில் இல்லை. நாங்கள் நினைத்தால் இப்போதே பெரும்படை திரட்டி பெங்களூக்குள் நுழைய முடியும். எங்களால் உங்கள் எல்லைக்குள் வர முடியும்.

    ஒற்றுமை

    ஒற்றுமை

    நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். நமக்குள் பிரிவினை வேண்டாம் என தமிழக விவசாயிகள் சார்பில் கூறிக்கொள்கிறேன். கர்நாடக முதலமைச்சருக்கு எச்சரிக்கையுடன் வேண்டுகோள் விடுகிறேன் மேகதாது அணை திட்டத்தை நிறுத்துங்கள். கர்நாடக- தமிழ்நாடு மக்களிடையே பிரிவினை இல்லை. அதுபோலவே தண்ணீரிலும் பிரிவினை இருக்க கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    English summary
    DMDK Premalatha protested with party cadres against Mekedatu Dam Project in Hosur Border.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X