திருப்பதி அருகே 20 பேரை பலி கொண்ட சம்பவம் மணல் மாஃபியாக்கள் சதியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி அருகே 20 பேரை பலி கொண்ட சம்பவம் விபத்துதானா? அல்லது மணல் மாஃபியாக்களின் திட்டமிட்ட படுபாதக சதியா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருப்பதி அருகே காளஹஸ்தி நெடுஞ்சாலையில் ஏர்பேடு காவல்நிலையம் அருகே பேருந்துக்காக காத்திருந்த கூட்டத்துக்குள் இன்று பகல் லாரி ஒன்று தாறுமாறாக புகுந்தது. இதில் 20 பேர் பரிதாபமாக பலியாகினர்.

20 killed in Tirupati accident had come to file complaint against sand mafia

லாரி நிலைதடுமாறி முதலில் மின்கம்பத்தின் மீது மோதியது. இதில் மின் ஒயர்கள் அறுந்து, மணல் கொள்ளைக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வந்தவர்கள் மீது சரிந்து விழுந்தது. அப்படியே மின்சாரம் தாக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.

மற்றவர்கள் லாரி மோதியதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தங்களுக்கு எதிராக புகார் கொடுகக் சென்ற பொதுமக்கள் மீதான கோபத்தால் உள்ளூர் மணல் மாஃபியாக்கள் லாரியை மோதவிட்டு கொலை செய்தனரா? என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அப்பகுதி போலீசார் விசாரித்த்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
20 people were killed after a lorry rummaged through a stretch on Srikalahasti Highway, 25 kilometres away from Tirupati. The driver reportedly lost control, rammed the lorry into an electric pole and crushed people outside the Yerpedu police station. Incidentally most of the victims had come to seek action against rampant sand mining in the locality.
Please Wait while comments are loading...