குட்கா போட்ட மாப்பிள்ளை.. கிட்ட வரவே வராத.. மாலையை கழட்டி எறிந்த மணப்பெண்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

லக்னோ: குட்கா போட்ட மாப்பிள்ளை வேண்டாம் என கூறி உத்தரப்பிரதேசத்தில் மணப்பெண் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் சமாதானப்படுத்தியும் தனது முடிவில் மாறாமல் இருந்த மணப்பெண் மாலையை கழட்டி போட்டுவிட்டு சென்றுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பாலிலா மாவட்டம் முரார்பாதி கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவருக்கு நேற்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தடல்புடலாக நடைபெற்று வந்தன.

திருமணத்திற்கு முன்னதாக சடங்கு நிகழ்ச்சிகள் நடந்து உள்ளது. இதில் இருவீட்டாரும் கலந்துகொண்டனர்.

களைக்கட்டிய மண்டபம்

களைக்கட்டிய மண்டபம்

மண்டபம் முழுவதும் கல்யாண நிகழ்ச்சிகள் களைக்கட்டியிருந்தது. அப்போது திடீரென வெளியே சென்றுவிட்ட வற்த மாப்பிள்ளை எதையோ வாயில் போட்டு மென்றுள்ளார்.

குட்கா போட்ட மாப்பிள்ளை

குட்கா போட்ட மாப்பிள்ளை

இதனைக் கவனித்த மணப்பெண், மணமகன் குட்கா போட்டு மெல்வதை மோப்பம் பிடித்துவிட்டார். இதையடுத்து குட்கா போடும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள்ள முடியாது மணப்பெண் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

தோல்வியில் முடிந்த முயற்சி

தோல்வியில் முடிந்த முயற்சி

இதனால் செய்வறியாது திகைத்துப் போன இருவீட்டாரும் பெண்ணை சமாதானம் செய்ய முயற்சித்தனர். விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை போனது.

மாலையை கழட்டிய மணப்பெண்

மாலையை கழட்டிய மணப்பெண்

ஆனாலும் தனது முடிவில் மாறாமல் இருந்த மணமகள் மாலையை கழட்டி வீசியெறிந்துவிட்டு சென்று விட்டார். இதையடுத்து இருவீட்டாரும் சோகத்துடன் திருமண மண்டபத்தை விட்டு புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A girl refused to marry a man for chewing gutkha in Murarpatti village in Uttar Pradesh’s Ballia district, leaving the groom high and dry and her relatives shocked over the weekend.
Please Wait while comments are loading...