இந்த விஷயத்தில் இந்தியாவை அமெரிக்கா கூட மிஞ்ச முடியாது ... அது இதுதான்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலக அளவில் இந்தியாவிலேதான் அதிகம் பேர் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களாக இருக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தம் 24 கோடியே 10 லட்சம் பேர் இந்தியாவில் ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருக்கிறார்கள்.

ஃபேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவதில் அமெரிக்க மக்களை மிஞ்சி இந்தியா முதலிடத்துக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. அமெரிக்காவில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 24 கோடி பேர்தான்.

ஆனால் இந்தியாவிலோ 24 கோடியே 10 லட்சம் பேர் ஃபேஸ்புக்கின் பயனர்களாக உள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த மக்கள் தொகையில் கால் பங்கு ஃபேஸ்புக் வாசிகளாக உலவுகிறார்கள் என்று தெரிகிறது.

உலகளவில் ஒவ்வொரு மாதமும் 2 பில்லியன் மக்கள் ஃபேஸ்புக் சமூகவலைதளத்தை பயன்படுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்த சில நாட்களிலேயே இந்த புதிய பட்டியலும் வெளியாகியுள்ளது.

நாடு வாரியாக கணக்கெடுப்பு

நாடு வாரியாக கணக்கெடுப்பு

நாடுகள் வாரியாக ஃபேஸ்புக் பயனர்கள் எண்ணிக்கை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. உலகில் வேறு எந்த தொழில் நுட்பமும் இவ்வளவு வேகமாக பரவியது இல்லை என்கிற அளவுக்கு ஃபேஸ்புக் வளர்ச்சி இருக்கிறது.

இருமடங்கு அதிகரிப்பு

இருமடங்கு அதிகரிப்பு

அண்மைக்காலங்களில், இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இருமடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. ஸ்மார்ட் போன்களின் வருகை சமூக வலைதள பயன்பாட்டை அதிகரிக்க வைத்துள்ளது.

6 மாதத்தில் அதிக வளர்ச்சி

6 மாதத்தில் அதிக வளர்ச்சி

அதாவது, கடந்த 6 மாதங்களில் இந்தியாவில் ஃபேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை 27% அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் அமெரிக்காவில் 12% மட்டுமே அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களை முந்திய ஆண்கள்

பெண்களை முந்திய ஆண்கள்

இந்தியாவில் ஃபேஸ்புக் கணக்கு வைத்திருப்போரில் 75% ஆண்களாகவே இருக்கின்றனர். ஆனால் அமெரிக்காவில் 54% பெண்கள் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

ஃபேஸ்புக் மூலம் அரசு தொடர்புகள்

ஃபேஸ்புக் மூலம் அரசு தொடர்புகள்

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் இணையதள சேவைகள் ஃபேஸ்புக் மூலமும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசுகளின் திட்ட அறிமுகம், வாக்காளர் விவரங்கள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்ள ஸ்மார்ட் போன் உதவுகிறது.

செய்திகள் ஆர்வம்

செய்திகள் ஆர்வம்

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் எல்லோருமே ஃபேஸ்புக் பக்கத்தில் வரும் செய்திகளைப் படிக்கிறார்கள். இதனால் அதன் வாசிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Next Web report says, India overtakes US to mark highest Facebook users in the Universe.
Please Wait while comments are loading...