For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிசிசிஐ அதிகாரிகளை கட்டி வைத்து அடிக்க வேண்டும்.. மார்க்கண்டேய கட்ஜு காட்டம் !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: பிசிசிஐ அதிகாரிகளை கம்பத்தில் கட்டி வைத்து உதைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ட்விட்டரில் காட்டமாக கருத்து கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்தது. அந்த குழு பல்வேறு பரிந்துரைகள் செய்திருந்தது. அவற்றில் பெரும்பாலானவற்றை ஏற்க முடியாது என்று பிசிசிஐஅறிவித்து விட்டது.

BCCI officials need to be tied and lashed, tweets Justice Markandey Katju

மேலும் லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஆராய்ந்து கருத்து கூறுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பிசிசிஐ சார்பில் நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் பிசிசிஐ சீர்திருத்தங்கள் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று விமர்சித்திருந்தார். மேலும் லோதா குழு அமைக்கப்பட்டதே செல்லாது என்றும் கட்ஜு கருத்து தெரிவித்திருந்தார்.

மேலும் லோதா கமிட்டியை சந்திக்க திட்டமிட்டிருந்த பிசிசிஐ அதிகாரிகளை சந்திக்க வேண்டாம் என்று அறிவுறித்திய கட்ஜு, உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, கூடுதல் நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் முறையிடலாம் என்றும் பிசிசிஐக்கு அறிவுரை கூறியிருந்தார்.

இந்நிலையில் லோதா கமிட்டியின் பரிந்துரைகளுக்கு, தற்போதைய பிசிசிஐ அதிகாரிகள் புரிந்து வரும் எதிர்வினைகளுக்கு கட்ஜு கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், 'இந்த நடைமுறை மட்டும் போதுமானதல்ல; நீதிபதி லோதா பிசிசிஐ அதிகாரிகளை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடித்திருக்க வேண்டும்' என்று டுவிட் செய்துள்ளார். கட்ஜுவின் இந்த டிவிட் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது.

English summary
Former Supreme Court judge Markandey Katju has tweeted his searing view on the entire Lodha-BCCI issue by stating that the officials of the Indian Cricket board should be tied naked and lashed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X