இந்து தீவிரவாதம்.. கமல்ஹாசனை ஹபீஸ் சயீத், ஜாகிர் நாயக்குடன் ஒப்பிட்டு விமர்சிக்கும் பாஜக

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்து தீவிரவாதத்தை விமர்சித்த நடிகர் கமல்ஹாசனை பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத், இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக் ஆகியோருடன் ஒப்பிட்டு தாக்கி வருகிறது பாஜக.

இந்து தீவிரவாதம் குறித்த கமல்ஹாசனின் கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாள ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறியதாவது:

ப.சி. பேச்சு

ப.சி. பேச்சு

கடந்த காலங்களில் முஸ்லிம்களின் வாக்குகளை குறிவைத்து இந்துக்களை தாழ்த்தி பேசுவதை சோனியாவும் ராகுல் காந்தியும் செய்து வந்தனர். அதேபோல காங்கிரஸ் தலைவர் சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே ஆகியோர் இந்து தீவிரவாதம் இருக்கிறது என நாடாளுமன்றத்திலேயே பேசினார்கள்.

ஹபீஸ் சயீத் போல கமல்

ஹபீஸ் சயீத் போல கமல்

இதே கருத்தைத் தான் நடிகர் கமல்ஹாசனும் கூறியுள்ளார். தற்போது ப.சிதம்பரம் ஹபீஸ் சயீத் வரிசையில் கமல்ஹாசனும் இணைந்திருக்கிறார். இப்படியான கருத்துகள் பாகிஸ்தானுக்குத்தான் உதவியாக இருக்கும்.

கண்களை மூடிய கமல்

கண்களை மூடிய கமல்

கேரளாவின் இடது ஜனநாயக முன்னணியுடன் கமல்ஹாசன் நெருக்கமாக இருக்கிறார். இடதுசாரிகளின் வன்முறைகளைப் பற்றி பேசாமல் கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார் கமல்ஹாசன். தமிழக மக்கள் இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலை ஏற்க மாட்டார்கள். இவ்வாறு நரசிம்ம ராவ் கூறினார்.

ஜாகிர் நாயக்குடன் ஒப்பீடு

ஜாகிர் நாயக்குடன் ஒப்பீடு

ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் மூத்த தலைவர் ராகேஷ் சின்ஹாவோ, கமல்ஹாசன் இந்துக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இதேபோல இஸ்லாம் மத பிரசாகர் ஜாகிர் நாயக் போல கமல்ஹாசன் பேசுவதாகவும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்,

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
BJP leaders compared Actor Kamal Haasan to Hafiz Saaed, Zakir Naik.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற