For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: அயோத்தியா துணை வழக்கை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட்!

By Sudha
Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி துணை வழக்கின் அப்பீல் மனு தள்ளுபடி- வீடியோ

    டெல்லி: மசூதிகள், இஸ்லாமியர்களின் வழிபாட்டில் ஒருங்கிணைந்த அங்கமா என்பது குறித்து மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் (பாபர் மசூதி/ராமர்ஜென்மபூமி) யாருக்குச் சொந்தம் என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் 1994ம் ஆண்டு இஸ்மாயில் பரூக்கி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மசூதிகள், இஸ்லாம் மதத்தின் வழிபாட்டுத் தலங்கள் அல்ல என்று உத்தரவிட்டது.

    Breaking News Live: Are Mosques integral part of Islam

    இந்தத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி மனு செய்யப்பட்டிருந்தது. அந்த மனு விசாரணையில் இருந்து வந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண் ஆகியோர் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் இதை அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு மாற்றத் தேவையில்லை என்றும் நீதிபதிகள் அறிவித்தனர்.

    Newest First Oldest First
    2:29 PM, 27 Sep

    அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற வேண்டும் - நீதிபதி அப்துல் நசீர்

    நீதிபதி அப்துல் நசீர் தனி தீர்ப்பு

    2:26 PM, 27 Sep

    அயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக்டோபர் 29ம் தேதி தொடங்கும்- சுப்ரீம் கோர்ட்
    2:23 PM, 27 Sep

    உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்

    ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு வழக்கை தொடர்ந்து விசாரிக்கும்

    2:22 PM, 27 Sep

    நீதிபதி தீபக் மிஸ்ராவின் தீர்ப்பையும் நீதிபதி அசோக் பூஷனே வாசிக்கிறார்

    அனைத்து மத வழிபாட்டு தலங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் - நீதிபதி அசோக் பூஷன்

    2:16 PM, 27 Sep

    அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற தேவையில்லை

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன் தீர்ப்பு

    இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு ஒன்றாக இருப்பதால் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படாது

    2:08 PM, 27 Sep

    அயோத்தி துணை வழக்கில் தீர்ப்பு வாசிக்கப்படுகிறது

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பை வாசிக்கிறது

    1:52 PM, 27 Sep

    முஸ்லிம் வழிபாட்டில் மசூதி அவசியமா? - சற்று நேரத்தில் தீர்ப்பு

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளிக்கிறது

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன் ஒரே தீர்ப்பு வழங்குவார்கள்

    நீதிபதி அப்துல் நசீர் தனி தீர்ப்பு வழங்குவார்

    8:49 AM, 27 Sep

    3 நபர் பெஞ்ச் விசாரிக்க மனுதாரர்கள் (முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் உள்ளிட்டோர்) தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது

    5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க கோரப்பட்டிருந்தது

    உச்சநீதிமன்றம் இக்கோரிக்கையை நிராகரித்தது

    இந்த வழக்கின் தீர்ப்பு ராமர் ஜென்மபூமி வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்

    அரசியல் ரீதியாகவும் இந்தத் தீர்ப்பு பல தாக்கங்களை ஏற்படுத்தும்

    1994 பரூக்கி வழக்கின் தீர்ப்பில் இஸ்லாமியர்கள் எங்கு வேண்டுமானாலும் தொழுகை நடத்தலாம் என உத்தரவிடப்பட்டிருந்தது

    மசூதிகளில் மட்டுமே தொழுகை நடப்பதில்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது

    English summary
    SC will deliver a key verdict on whether mosques are integral part of Islam or not.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X