For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-நேபாளம் இடையே நட்பு பேருந்து சேவை தொடக்கம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

பான்பஷசா: இந்தியா-நேபாளம் நாடுகளுக்கிடையே 27 ஆண்டுகளுக்குப் பிறகு நட்பு பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேபாள நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது பான்பஷசா நகரம். சம்பாவாட் மாவட்டத்தில் உள்ள இந்த நகரின் வழியாக, நேபாள நாட்டின் காஞ்சன்பூர் நகரிலிருந்து டெல்லிக்கு நட்பு ரீதியிலான பேருந்து இயக்கப்பட்டு வந்தது. அது 27 ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டது.

Bus Service starts Between India And Nepal After 27 year

இந்நிலையில் நட்பு ரீதியிலான அந்த பேருந்து சேவை இன்று மீண்டும் தொடங்கப்பட்டது. இதை இரு நாடுகளின் எல்லையையொட்டி வசிப்பவர்கள் வரவேற்றுள்ளனர். குடும்ப ரீதியாகவும், வணிக ரீதியாகவும் அவர்களுக்குள் உறவு இருந்து வருகிறது.

நேபாளம் நாட்டின் கான்சன்பூர், தண்டில் துரா, வோட்டி, சாபேன், அஷம், கலாலி, ஜாக்புத்தா மற்றும் சித்தார்தா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த பேருந்து வசதியை பயன்படுத்தி வந்தனர். குளிரூட்டப்பட்ட வசதியுடைய அந்த பேருந்துகள் காஞ்சன்பூருக்கு தினமும் அதிகாலை 6 மணிக்கு செல்லும். அங்கிருந்து மாலை 6 மணிக்கு டெல்லிக்கு புறப்படும்.

இந்த பேருந்தில் பயணம் செய்வதற்கு எவ்வித சிறப்பு ஆவணங்களும் வழங்கத் தேவை இல்லை. பயணிகளுக்கு வை-ஃபை இணைப்பு மற்றும் ஒருபாட்டில் மினரல் வாட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.

English summary
After 27 year India And Nepal friendship bus service starts o
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X