For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கெட்டுப் போன உணவால் கேரளாவில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 400 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

கேரளாவில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று இரவு உணவு அருந்திய 400 வீரர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் மத்திய பாதுகாப்புப் படைவீரர்கள் இரவு உணவு சாப்பிட்ட பின்னர் 400 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பள்ளிபுரம் பகுதியில் உள்ள முகாமில் தங்கியிருந்த 400 சிஆர்பிஎஃப் வீரர்கள் நேற்று இரவு உணவு சாப்பிட்டனர். இதைத் தொடர்ந்து வீரர்கள் தங்களுக்கு வயிறு வலிப்பதாகவும், வாந்தி வருவதாகவும் கூறிஉள்ளனர்.

CRPF personnels fall down after consuming food

இதையடுத்து அவர்கள் நகரின் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்ட 109 வீரர்கள் திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வரும் வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

எதிரிகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எல்லையில் பல்வேறு காலநிலை மாற்றத்தையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றும் வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், நல்ல பொருள்களை ராணுவ அதிகாரிகள் வெளியே விற்று விடுவதாகவும் சமீபத்தில் ராணுவ வீரர் ஒருவர் வீடியோ மூலம் குற்றம்சாட்டியிருந்தது வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

English summary
CRPF personnels in Kerala are admitted in hospitals complaining of stomach upset after they had food in last night.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X