யூரி தாக்குதலுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்: பிரதமர் மோடி திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் 18 ராணுவ வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ய நேரிட்ட சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
- ஜம்மு காஷ்மீரின் யூரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 தீரமிக்க ராணுவ வீரர்களை நாம் இழந்துள்ளோம். அந்த வீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.
- ராணுவ வீரர்களின் மரணம் அவர்கள் குடும்பத்துக்கு மட்டுமான இழப்பு அல்ல... தேசத்துக்கே பேரிழப்பாகும்
- நமது ராணுவத்தின் மீது நாம் முழு நம்பிக்கை வைப்போம். நிச்சயம் யூரி தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்.
- ஜம்மு காஷ்மீரத்து மக்கள் தேசவிரோத சக்திகளை அடையாளம் கண்டு அவர்களிடம் விலகியிருக்கத் தொடங்கியுள்ளனர்.
- அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம்தான் நமது நாட்டின் வளர்ச்சிக்கு மட்டுமல்ல... பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படுத்தும்.
- நாட்டின் குடிமக்களாகிய நாம் நமது கடமைகளை சரியாகச் செய்தால் இந்த தேசம் புதிய உயரங்களைத் தொடும்.
- பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களைப் பாராட்டுகிறேன்.
- கிராமப்புறங்களில் 2.5 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 1.5 கோடி கழிப்பறைகள் அடுத்த ஓராண்டுக்குள் கட்டப்படும்.
- வரும் அக்டோபர் 2-ந் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளில் மாசற்ற வாகன பேரணியில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications