For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இசட் பிளஸ் பாதுகாப்பு தேவை இல்லை: உ.பி. அரசிடம் தெரிவித்த கெஜ்ரிவால்

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேச அரசு ஆம் ஆத்மி கட்சி தலைவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் கெஜ்ரிவாலோ தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

Don't need Z-plus security: Arvind Kejriwal rejects UP government's plan

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள கௌஷம்பியில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் இருந்து 1 கிமீ தூரத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் 50 முதல் 60 பேரால் தாக்கப்பட்டது. இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க உத்தர பிரதேச மாநில அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் கெஜ்ரிவாலோ தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு எல்லாம் தேவையில்லை என்று தெரிவித்துவிட்டார். எனக்கு தேவை பாதுகாப்பு இல்லை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஆட்கள் தான் தேவை என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லி முதல்வரான கெஜ்ரிவாலுக்கு தற்போது 3 எஸ்.ஐ.க்கள் மற்றும் 17 முதல் 18 போலீசார் பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Uttar PRadesh government has reportedly decided to provide Z-plus security to the Aam Admi party chief Arvind Kejriwal. But Kejriwal told that he doesn't need that security.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X