For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜராத்தில் தலித்துகள் மீதான தாக்குதலை கண்டித்து நடந்த ஆர்பாட்டங்களில் வன்முறை: 2 பேர் பலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத்தில் தலித் இளைஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்த தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்ததை அடுத்து, பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் பலியாகி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

தலித் இளைஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து குஜராத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நீதி கோரி காங்கிரஸ் பிரமுகர் உட்பட 7 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது.

Gujarat

குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஏற்கெனவே இறந்த பசுமாட்டின் தோலை உரித்த தலித்துகள் மீது கும்பல் ஒன்று சரமாரியாகத் தாக்கியது. கடந்த 11ம் தேதி தலித் இளைஞர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது. மோட்டா சமதியாரா என்ற கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. இதனையடுத்து அம்மாநிலத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் வலுத்துள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு குஜராத் மாநில அரசுப் பேருந்துகள் கோண்டால் பகுதியில் தீக்கிரையாக்கப்பட்டன. அதுதவிர தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி உள்ளூர் பிரமுகர் அனில் மதாத் உள்ளிட்ட 7 தலித்துகள் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக பூச்சிக் கொல்லி மருந்தை உட்கொண்டனர்.

தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குஜராத் மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. சுரேந்திரநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாட்டுத் தோல்களை குவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அரசு முன்வந்துள்ளது. ஆனால், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை கோரி போராட்டங்கள் தொடர்கின்றன.

தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். கடமையை செய்யாத குற்றத்துக்காக ஓர் ஆய்வாளர் உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விரைவாக விசாரிக்கப்பட்டு 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ஆனந்திபென் படேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தலித் இளைஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்த தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. வன்முறை தொடர்ந்து நீடிப்பதால் பதற்றம் உருவாகியுள்ளது. இதுவரை நடந்த வன்முறைக்கு 2 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நாளை சந்திக்க இருப்பதாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை உனா மாவட்டத்திற்கு செல்ல இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தெரிவித்துள்ளார்.

இந்துக்களில் பலர் பசுவை புனிதமானதாகக் கருதுகிறார்கள். பசுக் கொலை பல மாநிலங்களில் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு, தாத்ரி நகரில் ,முஸ்லீம் ஒருவர் அவரது வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் பேரில் வன்முறைக் கும்பல் ஒன்றால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டார்.

Mob violence crippled most of Saurashtra, including Rajkot, Jetpur, and Dhoraji late on Monday evening, after seven Dalits attempted suicide by consuming poison earlier in the day.

60 words

குஜராத்தில் தலித் இளைஞர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடத்த தலித் அமைப்புகள் அழைப்பு விடுத்ததை அடுத்து, பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நடந்த ஆர்ப்பாட்டத்தில் 2 பேர் பலியாகி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

English summary
Mob violence crippled most of Saurashtra, including Rajkot, Jetpur, and Dhoraji late on Monday evening, after seven Dalits attempted suicide by consuming poison earlier in the day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X