கண்காட்சியில் ராட்டினம் சரிந்து கோர விபத்து.. போலீஸ் அதிகாரி பலி.. 13 காயம்.. ஹரியானா அதிர்ச்சி!
சண்டிகர்: ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சூரஜ்குண்ட் பகுதியில் நடைபெற்ற கண்காட்சியில் ராட்டினம் சரிந்து விழுந்ததில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத் மாவட்டத்தில் உள்ள சூரஜ்குண்டில் ஒரு கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்த ராட்டினத்தில் ஏராளமானோர் விளையாடினர். இன்று மாலை 6 மணியளவில் அந்த ராட்சத ராட்டினம் திடீரென சரிந்து விபத்துக்குள்ளானது.

ராட்டினம் சுற்றிக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் பணியில் இருந்த காவல் அதிகாரி ஒருவர் பலியானார். மேலும் 13 பேர் காயமடைந்தனர். உடனடியாக அங்கு இருந்தவர்கள், படுகாயமடைந்த அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் கிடைத்ததும் மாவட்ட துணை ஆணையர் ஆயுஷ் சின்ஹா, சுற்றுலா மேலாண்மை இயக்குனர் பார்த் குப்தா ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். மாலை 6 மணியளவில் சுமார் 15 பேருடன் ராட்டினம் திடீரென சரிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்று போலீசார் கூறினர். பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததே இந்த விபத்திற்குக் காரணம் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கையின் போது, கடை நடத்துநர் ராகவ்விற்கும் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. முன்னதாக, மாலை 5 மணியளவில், கண்காட்சி திடலின் 2வது வாயில் திடீரென இடிந்து விழுந்ததில் குழந்தை உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர்.
உயிரிழப்புக்கு ஹரியாணா முதலமைச்சர் நயாப் சைனி இரங்கல் தெரிவித்துள்ளார். "ஃபரிதாபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சூரஜ்குண்ட் மேளாவின் போது ஏற்பட்ட விபத்து குறித்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில், காயமடைந்தவர்களுக்கு உரிய மற்றும் உடனடி சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications