பிரதமர் மோடிக்கு யாராவது ஐ லவ் யூ சொன்னீங்களா?.. கேள்வி கேட்டு கலாய்த்த ஜிக்னேஷ் மேவானி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  காதலர் தினம்...பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்?

  டெல்லி: பிரதமர் மோடிக்கு யாராவது ஐ லவ் யூ சொன்னீர்களா என்ற ஜிக்னேஷ் மேவானி கேள்வி கேட்டு இருக்கிறார். இந்த டிவிட் மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.

  இதற்கு பாஜக கட்சினர் கோபமாகப் பதில் அளித்து வருகிறார்கள். சிலர் இதை வைத்து மோடிக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.

  இதற்கு முன்பே ஒரு டிவிட்டில் ஜிக்னேஷ் காதலர் தினம் குறித்து குறிப்பிட்டு இருந்தார். அந்த டிவிட்டும் அதிக அளவில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

   சில இடங்களில் பிரச்சனை

  சில இடங்களில் பிரச்சனை

  உலகம் முழுக்க காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தலம் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. காதலர் தினம் இந்திய கலாச்சாரத்தை கெடுக்கிறது என்று அவர்கள் கூறி சில இடங்களில் வன்முறையில் கூட ஈடுபட்டு வருகிறார்கள்.

  ஜிக்னேஷ் டிவிட்

  இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி இதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில் ''எனக்கு இன்று நிறையப் பேர் ஐ லவ் யூ சொன்னார்கள். ஆனால் சந்தேகமாக இருக்கிறது, யாராவது பாசமாக மோடிக்கு ஐ லவ் யூ சொன்னார்களா?. ஹாப்பி வேலண்டைன்ஸ் டே'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

   திட்டினார்கள்

  திட்டினார்கள்

  இதையடுத்து பாஜக ஆதரவாளர்கள் கோபம் அடைந்து இருக்கிறார்கள். இதற்கு பதிலாக அவர்கள் காதலர் தினம் குறித்து மோசமாகக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அதேபோல் ஜிக்னேஷ் மேவானியின் இந்தக் கருத்தையும் கலாய்த்து இருக்கிறார்கள்.

  வைரல் டிவிட்

  அதேபோல் ஜிக்னேஷ் இன்னொரு டிவிட்டில் பிரியா பிரகாஷ் வாரியாரின் வைரல் வீடியோவை அப்லோட் செய்துள்ளார். காதலுக்கு எதிராக பேசுவார்களுக்கு இந்த வீடியோதான் சிறந்த பதில் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Has anyone told 'I love you' to Modi, asks Jignesh Mevani sarcastically in twitter on Valentine's day. This twitter got so viral after BJP'inas comment.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற