கல்லீரல் நோயால் உயிருக்கு போராடும் 9 வயது சிறுவன். உதவி கரம் நீட்டுங்கள்!

Posted By: Lekhaka
Subscribe to Oneindia Tamil

எங்கள் 9 வயது மகனான சத்விக் நாள்பட்ட கல்லீரல் நோயால் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளான். அவன் கீழே விழுந்ததில் அவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு அப்புறம் நாங்கள் மருத்துவரை ஆலோசனை செய்த போது தான் தெரிந்தது எலும்பு மிகவும் தேய்ந்து நொருங்கி விட்டது என்பது. அதற்கு அப்புறம் அவன் இந்த கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டான். அவன் ரெம்ப குறும்புத்தனம் பண்ணுவான். அவன் மீது எப்பொழுதும் நாங்கள் கவனமாகத் தான் இருப்போம்.

2011 ல் அவன் கீழே விழுந்ததில் அவனுடைய கை எலும்பு முறிந்து விட்டது. மருத்துவர் முறிந்த எலும்புகளை கம்பி கொடுத்து கட்டமைக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். ஆனால் அப்போது என்னிடம் போதுமான பணம் கூட இல்லை. அதைப் பற்றி யோசிக்க கூட எனக்கு நேரமில்லை. உடனடியாக எனது பைக்கை விற்று ரூபாய் 15,000 வரை பிரட்டினேன். இதே மாதிரி ஒரு நிகழ்ச்சி அடுத்த வருடமே நடந்தது. எப்பொழுதும் அவன் மீது நாங்கள் கவனமாக இருந்தாலும் அவனது குறும்புத் தனத்தால் ஒரு நாள் கட்டிலிருந்து விழுந்து விட்டான். அவனது முறிந்த இடது கையில் மறுபடியும் பலத்த அடி. இப்போது என் மனைவியின் நகைகளை விற்று அதற்கு சிகச்சை பார்த்தோம். இப்படி ஒவ்வொரு முறையும் அவன் பாதிப்படையும் போதெல்லாம் என்னிடம் இல்லாத பணத்தை என்னிடம் உள்ள பொருட்களை விற்று அவனது சிகச்சைக்காக செலவழித்தேன்.

please donate

என் பெயர் ஸ்ரீதர் காட்டூரி. ஒவ்வொரு முறையும் அவனுக்கு எதாவது நேரும் போதெல்லாம் நாங்கள் உடைந்து விடுவோம். இந்த பிரச்சினையால் அவனது உடம்பில் இரத்தம் ஓட்டம் சீராக பாயாமல் இரத்தம் கட்டுதல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவனுக்கு அரிப்பு ஏற்பட்டு இரத்தக் கசிவு ஏற்பட ஆரம்பித்து விட்டது. அவன் ஒவ்வொரு முறை வலியால் துடிக்கும் போதும் "அப்பா என்னை உடனே ஹாஸ்பிடல் கூட்டுட்டு போங்க" என்று அழறிக் கொண்டே வேதனையால் கத்துவான்.

அப்பொழுது நான் மருத்துவர்கள் கொடுத்த க்ரீம்யை அப்ளே செய்து அதிலிருந்து கொஞ்சம் அவனுக்கு நிவாரணம் கொடுப்பேன் . இந்த கல்லீரல் நோய் அவன் 45 நாள் குழந்தையாக இருக்கும் போதே ஏற்பட்டது. அப்பொழுதே நாங்கள் அதற்கு சின்ன அறுவை சிகிச்சையையும் செய்தோம். அதற்கு அப்புறம் அவன் எல்லா குழந்தைகள் போல் தான் வாழ்ந்தான். அக்டோபர் 2, 2017 ல் இந்த பிரச்சினை மறுபடியும் அவனை துன்புறுத்த ஆரம்பித்து விட்டது. இதிலிருந்து முற்றிலுமாக விடுபட வேண்டும் என்றால் அவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறி விட்டனர். அதற்கு 28 லட்சம் வரை செலவாகும் என்று அவர்கள் கூறியுள்ளனர். கடவுள் புன்னியத்தால் என் மனைவி கொடையாளியாக பொருந்தி உள்ளார். ஆனால் எங்களது நிதி நிலைமை தான் பிரச்சினையாக உள்ளது.

சத்விக்கின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவ நினைத்தால் நன்கொடை அளியுங்கள்!

நானும் என் மனைவியும் ஒரு தையல்கார்களாக இரண்டு கடைகளில் வேலை பார்த்து கொண்டிருக்கிறோம். எங்கள் இரண்டு பேரின் ஒட்டுமொத்த மாத வருமானம் 20,000 ரூபாய் தான். எங்க குடும்ப வருமானம் முழுவதும் குடும்ப செலவுக்கும் அவனது மருத்துவ செலவுக்கே சரியாகி விடுகிறது. என் மனைவி நகைகள், என் பைக் இப்படி விற்று தான் அவனை காப்பாற்றி கொண்டு வருகின்றோம். இப்பொழுது அவனுக்கு கொடுக்கப்படும் வழக்கமான சிகச்சைக்காகவே 30 லட்சம் வரை வங்கியில் கடன் வாங்கி செலவழித்தி உள்ளேன் . எங்கள் கைக்கு மீறிய பணத்தை செலவழித்தும் எங்களால் மகனின் உயிரை மீட்டெடுக்க முடியாமல் தவிக்கிறோம். என் மாத வருமானமும் வீட்டு வாடகை, குடும்ப செலவு, அவன் சிகச்சை செலவு என்று சென்று விடுகிறது. என்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று விட்டேன். இருப்பினும் இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான 28 லட்சம் ரூபாயை என்னால் பிரட்ட முடியாமல் தவிக்கிறேன்.

என் குழந்தை இந்த பிரச்சினையால் அவதிப்பட்ட பிறகு அவனால் பள்ளிக்கு கூட போக முடியவில்லை. அவன் மட்டும் வீட்டிற்குள்ளேயே தனியாக விளையாடிக் கொண்டு இருக்கிறான். "என்னை மட்டும் ஏன் வெளியே விளையாட விட மாட்டிகிறீங்க" என்று என்னிடம் அவன் ஒவ்வொரு முறை கேக்கும் போதும் என் கண்கள் கலங்கி விடுகின்றன. எனக்கும் ஆசையாகத் தான் இருக்கிறது அவன் ஓடியாடி விளையாடுவதை பார்ப்பதற்கு ஆனால் மறுபடியும் ஒரு எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டால் அவனது நிலைமை இன்னும் மோசமாகி விடுமே என்ற பயமும் என்னுள் இருக்கிறது. அவனால் பள்ளிக்கு தான் போக முடியவில்லை என்பதால் அவனது நண்பர்களை சந்திக்க அழைத்து சென்று அவனை சந்தோஷப்படுத்துவேன்.

please donate

ஒரு பத்து நிமிடம் அவர்களுடன் பேசி விட்டு மறுபடியும் நாங்கள் வீட்டிற்கு வந்து விடுவோம். அவனை நீண்ட நேரம் என்னால் வெளியே விட முடியாத நிலை . அவன் என்னிடம் கெஞ்சுவான் அப்பா இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு விளையாடிட்டு வரேன் என்று. ஆனால் என்னால் அனுமதிக்க முடியாது. என் மகனின் சின்ன ஆசையை கூட நிறைவேற்ற முடியாமல் தவித்து கொண்டு இருக்கிறேன் . ஏனெனில் அவனது சருமமும் வெளியே சென்றால் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

ஸ்ரீதர் காட்டூரி தன் மகன் கல்லீரல் அறுவை சிகச்சைக்காக நிதி திரட்ட போராடிக் கொண்டு இருக்கிறார். நீங்கள் நினைத்தால் உதவிக் கரம் நீட்டலாம்.

சத்விக் டீவி யில் அதிகமாக சிஐடி தொடரைத் தான் விரும்பி பார்ப்பான். ஒவ்வொரு முறையும் "அப்பா நான் ஏசிபி ப்ரோதியுமன் மாதிரி எதிர்காலத்தில் ஆவேன்" என்று கூறுவான். என் மகனின் கனவு இலட்சியம் எல்லாம் சிறந்த போலிஸ் அதிகாரி ஆவது தான். அவனது எதிர் காலக் கனவுகளும் இந்த மாற்று அறுவை சிகிச்சையில் தான் வாழ்கிறது. நீங்கள் நினைத்தால் என் மகனுக்கு உதவி செய்ய முடியும். என் மகனின் கனவுகளை நிறைவேற்ற எனக்கு வாய்ப்பளியுங்கள். அவனது உயிரை காக்க எனக்கு உதவி செய்யுங்கள். உங்கள் ஒவ்வொருவரின் உதவியும் என் மகனின் இயல்பு வாழ்க்கையை மீட்டுத் தர உதவும். என் மகனின் முகத்தில் வேதனையை நீக்கி சந்தோஷத்தை மலரச் செய்ய உதவுங்கள். ஒரு அப்பாவின் கஷ்டத்திற்கு கை கொடுங்கள். நன்றி!!

நீங்கள் ஸ்ரீதருக்கு உதவி செய்ய நினைத்தால் கீட்டோ மூலம் இங்கே உதவலாம்.

English summary
After Selling My Bike, House, Gold, I Still Need Help To Fund My Son’s Liver Transplant,Please DONATE.