மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக கேகே வேணுகோபால் நியமனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் புதிய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞரும் அரசியல் சட்ட வல்லுநருமான கே.கே.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அட்டர்னி ஜெனரலாக இருந்த முகுல் ரோத்தகி தமது பதவியை அண்மையில் ராஜினாமா செய்தார். அவருக்கு மத்திய அரசு பதவி நீட்டிப்பு வழங்க மறுத்த நிலையில் ராஜினாமா செய்தார்.

K K Venugopal appointed Attorney General of India

இந்நிலையில் புதிய அட்டர்னி ஜெனரலாக 86 வயதாகும் மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபாலை நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கே.கே. வேணுகோபால் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.

நீதித்துறையில் அரை நூற்றாண்டுகால அனுபவம் வாய்ந்தவர். 1970களின் இறுதியில் மொரார்ஜி தேசாய் காலத்தில் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டவர் வேணுகோபால்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Senior advocate and constitutional expert, K K Venugopal has been appointed as the Attorney General of India. He replaces Mukul Rohatgi who stepped down from the post and refused an extension.
Please Wait while comments are loading...