For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்நாடகா: முக்கியமான இடங்களில் காங்கிரஸுக்கு வெற்றி.. டைம்ஸ் நவ்- விஎம்ஆர் கணிப்பு

கர்நாடகாவில் டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் அமைப்பு இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. காங்கிரஸ் 90-103 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 15ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் தற்போது டைம்ஸ் நவ் மற்றும் விஎம்ஆர் அமைப்பு இணைந்து நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இது பகுதி வாரியாக எங்கு எந்த கட்சி வெற்றிபெறும் என்று விவரம் வெளியாகி உள்ளது.

மொத்தம் எந்த கட்சி

மொத்தம் எந்த கட்சி

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கர்நாடகாவில் 90-103 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.பாஜக 80-93 தொகுதிகளில் வெற்றி பெறும். ஜேடிஎஸ் 31-39 தொகுதிகளில் வெற்றி பெறும். மற்ற கட்சி, சுயேட்சைகள் 2-4 தொகுதிகளில் வெற்றிபெறுவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. காங்கிரஸ் அதிக இடங்களை பிடித்தாலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தெரியவந்துள்ளது.

பெங்களூர் எவ்வளவு

பெங்களூர் எவ்வளவு

இதில் மொத்தமாக பெங்களூரில் 14 இடங்களை காங்கிரஸ் பெறும். பாஜகவும் 14 இடங்களை பிடிக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் 1-2 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. இதில் கர்நாடகாவில் மிகவும் குறைவாக வாக்குப்பதிவு பெங்களூரில் மட்டுமே பதிவாகி உள்ளது. பெங்களூரில் 45 சதவிகித வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

பழைய மைசூர் எவ்வளவு

பழைய மைசூர் எவ்வளவு

இதில் மொத்தமாக பழைய மைசூரில் 21 இடங்களை காங்கிரஸ் பெறும். பாஜக 7 இடங்களை பிடிக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

பாம்பே கர்நாடகா எவ்வளவு

பாம்பே கர்நாடகா எவ்வளவு

இதில் மொத்தமாக பாம்பே கர்நாடகாவில் 26 இடங்களை காங்கிரஸ் பெறும். பாஜக 23 இடங்களை பிடிக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் 1-2 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

மத்திய கர்நாடகா எவ்வளவு

மத்திய கர்நாடகா எவ்வளவு

இதில் மொத்தமாக மத்திய கர்நாடகாவில் 12 இடங்களை காங்கிரஸ் பெறும். பாஜக 17 இடங்களை பிடிக்கும். மதசார்பற்ற ஜனதா தளம் 1-2 இடங்களை பிடிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

கடற்கரை சாலை எவ்வளவு

கடற்கரை சாலை எவ்வளவு

இதில் மொத்தமாக கடற்கரை சாலையில் 13 இடங்களை காங்கிரஸ் பெறும். பாஜக 8 இடங்களை பிடிக்கும். இந்த பகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளம் எந்த இடங்களையும் பிடிக்காது என்று கூறப்பட்டு உள்ளது.

ஹைதராபாத் கர்நாடகா எவ்வளவு

ஹைதராபாத் கர்நாடகா எவ்வளவு

இதில் மொத்தமாக ஹைதராபாத் கர்நாடகாவில் 12 இடங்களை காங்கிரஸ் பெறும். பாஜக 19 இடங்களை பிடிக்கும். இந்த பகுதிகளில் மதசார்பற்ற ஜனதா தளம் எந்த இடங்களையும் பிடிக்காது என்று கூறப்பட்டு உள்ளது.

English summary
Karnataka Exit Polls 2018: Congress will get a high number of seats, still no majority says, Times Now. According to it, Congress will get 90-103, BJP will get 80-93, JDS will get 31-39, Other will get 2-4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X