கேரளா பாஜக அலுவலகத்தில் இரும்பு குண்டுகள், பட்டா கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கண்ணூர்: கேரளா பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் இரும்பு குண்டுகள், பட்டா கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் காலூன்றுவதற்காக பாஜக தலைவர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை களமிறக்கி பேரணி நடத்தப்பட்டது. ஆனாலும் காங்கிரஸும் இடதுசாரிகளும் வலுவாக இருக்கும் கேரளாவில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

Kerala recover steel bombs from BJP office

இதனால் கேரளா பேரணியில் இருந்து பாதியிலேயே அமித்ஷா கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் பானூரில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டனப் பேரணி நடத்தினர்.

அப்போது பாஜகவினர் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். பாஜகவினரின் வெறிச் செயலில் 18 பேர் படுகாயமடைந்தனர்.

இதையடுத்து கண்ணூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று அதிரடியாக போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து இரும்பு குண்டுகள், பட்டாகத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kerala Police have been recovered sword and steel bombs from the BJP office in Kannur.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற