For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மராத்தா சமூகத்துக்கான 16% இடஒதுக்கீடு:மும்பை கோர்ட் தடை! முஸ்லிம்களுக்கான 5% ஒதுக்கீட்டுக்கு அனுமதி

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்துக்கு முந்தைய காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் 16% இடஒதுக்கீடு அளித்ததற்கு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி நிறுவனங்களில் 5% இடஒதுக்கீடு தொடர மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் வெறும் 6 இடங்களைத்தான் கைப்பற்றியது. இதனால் சட்டசபை தேர்தலிலும் படுதோல்வியை சந்திக்க நேரிடுமோ எனக் கருதி கல்வி, வேலைவாய்ப்புகளில் மராத்தா வகுப்பினருக்கு 16%, முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கிடு வழங்கிட அவசர சட்டம் பிறப்பித்தது.

இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த இடஒதுக்கீட்டின் அளவானது 73% என அதிகரித்தது. ஆனால் உச்சநீதிமன்றமோ 50%க்கும் மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என்று நிர்ணயித்துள்ளதை சுட்டிக் காட்டி இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் ஊடகவியலாளர் கேதன் டிரோட்கர் பொதுநலன் வழக்கைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், மராத்தா சமூகத்தினருக்கான 16% இடஒதுக்கீட்டுக்குத் தடை விதித்தது; அதே நேரத்தில் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கான 5% இடஒதுக்கீடு தொடர அனுமதி அளித்துள்ளது.

மும்பை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியுள்ளார்.

English summary
The Maharashtra government's decision to grant 16 per cent reservation to Marathas in government jobs and educational institutions has been stayed by the Bombay High Court, which today agreed that it is unconstitutional. The court, though, allowed five per cent quota to Muslims in educational institutions.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X