For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பதக்கங்கள், விருதுகளை குவிக்கும் ”பரபர” பாட்டி…

Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாபை சேர்ந்த 99 வயது பெண்மணி அமெரிக்காவில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாப் தலைநகர் சண்டிகரை சேர்ந்தவர் "மன் கவுர்" 99 வயதான பெண்மணி. ஓட்டப்பந்தயம் போன்ற தடகள விளையாட்டுகளில் அதிக ஆர்வம் கொண்டவர்.

Old lady being energetic athlete till now…

பதக்கப் பட்டியல்:

நம் நாட்டில் பல போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் முதியோருக்காக நடத்தப்படும் தடகள போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள், விருதுகளை பெற்றுள்ளார்.

தினமும் யோகா:

சமீபத்தில் அமெரிக்காவில் பெற்ற விருதுடன், நாடு திரும்பிய அவர், சண்டிகர் நகரில் பத்திரிகையாளர்களிடம் "தினமும், அதிகாலை, 3:00 மணிக்கு எழுந்து, வீடு அருகே உள்ள பூங்காவில், 400 மீட்டர் ஓடுவேன்; பின், யோகா செய்வேன்"என்று தனது சாதனைக்கான காரணங்களை கூறியுள்ளார்.

பழச்சாறே என் எனர்ஜி டிரிங்க்:

மேலும் அவர்,"எண்ணெய், நெய் போன்றவற்றை உணவில் சேர்ப்பதில்லை; தினமும், அதிக அளவில் பழச்சாறுகளை குடிப்பேன்; நானே தயாரிக்கும் உணவை, இரண்டு முறை எடுத்துக்கொள்வேன்"என்றார்.

பாட்டியின் தொடர் வெற்றி:

கடந்த ஆண்டு, கனடாவில் நடந்த ஓட்டப்பந்தயம் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் ஐந்து தங்கம், அமெரிக்காவில் நடந்த உலக தொடர் விளையாட்டுப் போட்டிகளில் ஐந்து தங்கம் வென்றுள்ளார்.

அத்லெட் ஆப் தி இயர்:

2011ல் அமெரிக்காவில் நடந்த சர்வதேச தடகள போட்டிகளில் "அத்லெட் ஆப் தி இயர்" விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
An old lady whose age is 99, being a best athlete in the American running race. She won lot of prizes in various athletic competition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X