For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நச்சுன்னு ஒரு 'இச்' கொடுத்தால் 80 மில்லியன் பாக்டீரியா பரவுதாம்: உஷார்!

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: தம்பதிகள் முத்தம் கொடுக்கையில் 80 மில்லியன் பாக்டீரியா பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நெதர்லாந்தின் ஆர்கனைசேஷன் ஃபார் அப்ளைட் சயின்டிபிக் ரிசர்ச் குழு முத்தம் கொடுப்பதால் பாக்டீரியாக்கள் பரவுவது பற்றி ஆய்வு செய்தது. அந்த குழு 21 தம்பதிகளிடம் அவர்களின் முத்த பழக்க வழக்கம் பற்றியும், கடந்த ஆண்டு அவர்கள் அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொண்டார்களா என்றும், கடைசியாக எப்பொழுது லிப் டூ லிப் முத்தம் கொடுத்தனர் என்றும் கேட்டது.

One kiss 'shares 80 million bacteria'

தம்பதிகளை 10 விநாடிகள் முத்தமிடுமாறு அந்த குழு கேட்டுக் கொண்டது. அவர்கள் முத்தமிடும் முன்பும், பின்பும் அவர்களின் எச்சில் மாதிரியை ஆராய்ச்சியாளர்கள் சேகரித்தனர். அதில் ஜோடிகளில் ஒருவருக்கு ப்ரோபயாட்டிக் பானம் குடிக்க அளிக்கப்பட்டது. அந்த பானத்தை குடித்த நபர் தனது ஜோடிக்கு 10 விநாடிகள் முத்தம் கொடுத்தார். இரண்டாவது முறையாக முத்தம் கொடுத்தபோது அவர் வாயில் இருந்து சராசரியாக 80 மில்லியன் பாக்டீரியா பரவியது தெரிய வந்தது.

நம் வாயில் 700க்கும் மேற்பட்ட வகையான பாக்டீரியாக்கள் உள்ளன. அதில் சில பாக்டீரியாக்கள் எளிதில் பிறருக்கு பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமும் 9 முறை முத்தம் கொடுக்கும் தம்திகளுக்கு ஒரே வகையான பாக்டீரியாக்கள் பரவுகின்றன. நமக்கு நெருக்கமானவர்களுக்கு அன்பு மிகுதியால் கொடுக்கும் முத்தத்தால் பாக்டீரியா பரவுகிறது.

அட போங்க பாஸ், ஆராய்ச்சியாளர்கள் என்றால் இப்படி தான் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதை எல்லாம் கேட்டால் வாழ முடியாது என்கிறது ஒரு கூட்டம்.

English summary
According to a research, a single intimate kiss can transfer as many as 80 million bacteria.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X